படம்: மாடல்
படம்: மாடல்
டில்லி:

நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி, “ஒயின் உடலுக்கு நல்லது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்களில் ஒருவரான அஸ்வினி உபாத்தியாயா, “நாடு முழுதும் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று காலை நடந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  “குறைந்த அளவு மது அருந்துவது உடல் நலத்தை பாதிக்காது. மேலும்,  ஒயின் உடல் நலத்துக்கு நல்லது என்றும், அதிலும் குறிப்பாக ரெட் ஒயின், இதயத்துக்கு வலு சேர்க்கும் என்று என ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என்றார்கள். மேலும், “உடல் நலத்துக்கு கேடு என்பதால் முழு மதுவிலக்கை நாடு முழுவதும் கொண்டு வர முடியாது என்றும் தெரிவித்தார்கள்.
பீகார் மாநிலத்தில் அமலில் இருக்கும் முழு மதுவிலக்கு செல்லாது என்று அம் மாநில (பாட்னா) உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது நாடு முழுதும் விவாதப்பொருளாகியிருக்கிறது.
இந்த நிலையில் “ஒயின் உடலுக்கு நல்லது” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
·
·