ஆன்மீக பூமி கலவர பூமியாக மாறுமா? அரசு பிடிவாதம் + பக்தர்கள் கொந்தளிப்பு = பதற்றத்தில் சபரிமலை……

திருவனந்தபுரம்:

பரிமலை விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் பினராயி தலைமையிலான கேரள கம்யூனிஸ்டு அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது.  அதேவேளையில் அய்யப்ப பக்தர்கள், பந்த அரச குடும்பத்தினர் பெண்களை அனுமதிக்க முடியாது என்று  உறுதியாக அறிவித்து உள்ளனர். இதன் காரணமாக சபரிமலை விவகாரம் மீண்டும் சூடுபிடித்து கேரளாவில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

மேலும் திருப்தி தேசாய் போன்ற பெண் சமூக ஆர்வலம் கோவிலுக்கு வருவேன்.. முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று சவால் விட்டுள்ள நிலையில், ஆன்மீக பூமியான சபரிமலை கலவர பூமியாக மாறும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதற்கு பினராயி தலைமையிலான மாநில அரசு முழு பொறுப்பு என்று  மாநில எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

பரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவில் எந்த உத்தரவும் பிறப்பகிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மீண்டும் தெளிவு படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே ஐப்பசி மாத பூஜையின்போது கோவிலுக்கு வர முயற்சி செய்த பல இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில், மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படு கிறது. தொடர்ந்து 60 நாட்கள் கோவிலின் நடை திறந்திருக்கும். இந்த நேரத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசித்து செல்வார்கள்.

இதற்கிடையில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வர விருப்பம் தெரிவித்து முன்பதிவு செய்துள்ளனர். இது அய்யப்ப பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக நேற்று கேரள முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் கூட்டம் தோல்வி அடைந்தது. பின்னர் பந்தள அரச குடும்பத்தினருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

ஆனால், உச்சநீதி மனற தீர்ப்பை மாநில அரசு செயல்படுத்தும் என்றும் அதில் உறுதியாக இருப்பதாகவும் கேரள முதல்வர் அறிவித்து உள்ளார். மேலும் அதிரடிப்படை வீரர்கள் உள்பட  சுமார் 15 ஆயிரம் போலீசாரை சபரிமலை காவல்பணிக்கு அமர்த்தி உள்ளார்.

அதே வேளையில், பந்தள மன்னர் குடும்பம், தந்திரிகள் அமைப்பு, பாஜக, காங்கிரஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் கோவிலுக்குள் இளம்பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் என்ன விலை கொடுத்தாவது தடுப்போம்… எங்கள் பிணத்தின் மீது வேண்டுமென்றால் அவர்கள் செல்லலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சமூக திருப்தி தேசாய் தனது குழுவினருடன் அய்யப்பன் கோவிலுக்குள் 17ந்தேதி நுழைந்தே தீருவேன் என்றும், எங்களை தடுத்து பாருங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார்.

 

திருப்தி தேசாயின் அறிவிப்பு கேரள மாநில மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பல அமைப்பினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

பினராயி விஜயனின் மார்க்சிஸ்ட் அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்திலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

ஏற்கனவே உச்ச நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, பத்திரிகையாளர் கவிதா, ரஹானா போன்றோரை சபரிமலைக்கு காவலதுறை பாதுகாப்புடன் சன்னிதானம் வரை அழைத்து சென்ற கேரள மாநில அரசு பின்னர் தந்திரிகளின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து, அவர்களை திருப்பி அழைத்து சென்றனர்.

இந்த நிலையில், தற்போது பெண்களை அதிரடிப்படை பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்துச் செல்ல மாநிலஅரசு முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதையும் தடுப்போம் என்று அய்யப்ப பக்தர்கள் சபதம் மேற்கொண்டுள்ளனர்.

அதவேளையில்,  “சபரிமலை கோவிலில் ஐதீகத்தை மீறி பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தால் கோவில் நடையை அடைத்து சுத்தி கலச பூஜை நடத்தப்படும்” என்றும் கோவில் தந்திரிகள் கூறி உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்  நிலையில், மாநில அரசின் முடிவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பாஜகவினர் போராட்டங் களை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதன் காரணமாக சபரிமலை விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக  ஆன்மிக பூமியான சபரிமலை கலவர பூமியாக மாறும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Will Spiritual sabarimalai Become a Voilance? devotees turmoil against Government stubbornness, ஆன்மீக பூமி கலவர பூமியாக மாறுமா? அரசு பிடிவாதம் + பக்தர்கள் கொந்தளிப்பு = பதற்றத்தில் சபரிமலை......
-=-