மத்தியப்பிரதேச இடைத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறை அமலாகுமா?

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, பதவியில் இருந்து வந்தது.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்தனர்

இவர்கள், அந்த மாநிலத்தில் காங்கிரசுக்கு எதிராகக் கலகம் விளைவித்த ஜோதிர் ஆதித்யா.சிந்தியாவின் ஆதரவாளர்கள் ஆவர்.

இதனால் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது.

பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான், நான்காம் முறையாக முதல் –அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் மேலும் இரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விலகினர்.

ஏற்கனவே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மரணம் அடைந்து விட்டனர்.

எனவே அந்த மாநிலத்தில் காலியாக உள்ள 26 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

’’மின்னணு எந்திரத்தில் அவர்கள் அனைவரும் ஒரே பட்டனில் அழுத்தி வாக்களிக்கும் நிலை உள்ளதால் கொரோனா  தொற்று பரவும் ஆபத்து உள்ளது. எனவே  , இந்த இடைத்தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையை அமல் படுத்த வேண்டும்’ என்று அந்த மாநில எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத்,தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

-பா.பாரதி.