சென்னை:
கொரோனாவிற்கு சித்த மருந்து தன்னிடம் இருக்கிறது என்று சொன்னாதாலேயே சித்தா மருத்து வர் திரு தணிக்காசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா?  என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம்  சித்த மருத்துவர்களை அரசு சந்தேக பார்வையுடன் பார்ப்பது ஏன் என்ற வேதனை தெரிவித்ததுடன், கொரோனா மருந்து விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம், கொரோனாவை சித்த மருத்துவத் தால் குணப்படுத்தப்ப முடியும் என்று கூறி விளம்பரப்படுத்தியதால், அவர் போலி மருத்துவர் என்று குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டார். அவர்மீத ர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதை எதிர்த்து,  அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  தமிழகஅரசு மற்றும் மத்தியஅரசு மீது கடுமையாக சாடியது.
சித்த மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறினால் சந்தேக பார்வையை விரிப்பது ஏன்?
மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் சந்தேகம் எழுப்புவது ஏன்?
சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தலாமே?
மத்திய மாநில அரசுகளால் சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டப்படுகிறது.
அனைத்து மருத்துவமனைகளிலும் அலோபதி என்ற பெயரில் கபசுர குடிநீர் கொடுத்து சித்த மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்படுகிறது.
சித்த மருத்துவர்கள் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறினாலே சந்தேகத்துடன் பார்க்கிறது.
நமது மருத்துவர்களுக்கு கட்டமைப்பு, பண உதவிசெய்து அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக எத்தனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சித்த மருத்துவர்கள் கண்டுபிடிதத எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளனரா?
ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, சித்தா வளர்ச்சிக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது?
என கேள்வி சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் அளிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.