டெல்லி:  காந்தி குடும்பத்தை ஏன் தாக்குகிறார்கள்? என செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாக கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என  மோடி அரசை கடுமையாக விமர்சித்தார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு காரணமாக, சோனியா காந்தி, ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று விலைவாசி உயர்வு எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 10 நாட்களாக பாராளுமன்றம் முடக்கப்பட்ட நிலையில், இன்று நாடு முழுவதும் மத்தியஅரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வயநாடு எம்.பி. ராகுல்காந்தி,  செய்தியாளர்களிடம், நீங்கள் விரும்பும் அனைத்தையும் கேள்வி கேளுங்கள். முற்றிலும் எதுவும் இல்லை, அனைவருக்கும் தெரியும். ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தை எதிர்ப்பதே எனது வேலை, அதைச் செய்யப் போகிறேன். நான் எவ்வளவு அதிகமாகச் செய்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் தாக்கப்படுவேன், நான் கடுமையாகத் தாக்கப்படுவேன். அதற்காக நான் வருத்தப்படப் போவது இல்லை, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்னை தாக்குங்கள், காந்தி குடும்பத்தை ஏன் தாக்குகிறார்கள்? என கொந்தளித்தார்.

மேலும்,  என் குடும்பம் இந்த நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தது. இந்த சித்தாந்தத்திற்காக நாங்கள் போராடுவது  எங்கள் பொறுப்பு. இந்துக்கள்-முஸ்லிம்கள் ஒருவரையொருவர் மோதிக்கொள்ளும் போதும், தலித்துகள் கொல்லப்படும்போதும், ஒரு பெண் தாக்கப்படும்போதும் நமக்கு வலிக்கிறது. எனவே, நாங்கள் போராடுகிறோம். இது ஒரு குடும்பம் மட்டுமல்ல, இது ஒரு சித்தாந்தம்.

இதற்காக ஏன் காந்தி குடும்பத்தை  தாக்குகிறார்கள்? நாங்கள் ஒரு சித்தாந்தத்திற்காக போராடுவதால் அவர்கள் அதை செய்கிறார்கள் & எங்களைப் போன்ற கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாங்கள் ஜனநாயகத்திற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் போராடுகிறோம், இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். இது நான் மட்டும் அல்ல, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. மோடி சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறார் என்று விமர்சித்தவர், ஜனநாயக படுகொலையை இந்தியா செய்து வருகிறது. நூற்றாண்டாக கட்டமைக்கப்பட்டு வந்த இந்தியா ஆட்சியாளர்களால் தகர்க்கப்பட்டு வருகிறது. பாஜகவின் சர்வாதிகார அட்சியை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்யப்படுகிறார்கள் என்று ஆவேசமாக தெரிவித்தார். ஜனநாயகம் முற்றிலுமாக காணாமல் போய்விட்ட நிலையில் 2,3 பணக்காரர்களுக்காக மட்டுமே சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என விமர்சித்தார்.

“ஹிட்லரும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார், அவரும் தேர்தல்களில் வெற்றி பெற்றார். அதை எப்படி செய்தார்? ஜெர்மனியின் அனைத்து நிறுவனங்களையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.. முழு அமைப்பையும் எனக்குக் கொடுங்கள், தேர்தல் எப்படி வெற்றி பெறுகிறது என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்.” என்றார்.

மேலும், கூறுகையில், “நிதிஅமைச்சர் பேசும் மேக்ரோ எகனாமிக் அடிப்படைகள் வேறு ஏதோ என்று நான் நினைக்கிறேன். இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி நிதி அமைச்சருக்கு எந்த புரிதலும் இல்லை, பூஜ்ஜிய புரிதல் இல்லை. அவர்  ஒரு ஊதுகுழல். அங்கு இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த சந்திப்பின்போது, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் ஹெலாட் உடனிருந்தார்.