அமேதி தொகுதிக்கு 2013ல் அறிவிக்கப்பட்ட திட்டங்களை ஏன் நிறைவேற்றவில்லை?….மோடிக்கு ராகுல் கேள்வி

டில்லி:

அமேதி தொகுதிக்கு 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களை ஏன் நிறைவேற்றவில்லை? என்று மோடிக்கு ராகுல்காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புதிய குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். ‘‘எனது அமேதி தொகுதியில் மத்திய அரசின் திட்டங்கள் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. இது குறித்து 3 மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியும் பலனில்லை. இந்த திட்டங்களை ஏன் நிறைவேற்றவில்லை என்பதற்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்’’ என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வலுவாக உள்ள அமேதி தொகுதி விவிஐபி அந்தஸ்தை பெற்றுள்ளது. அதனால் இங்கு வளர்ச்சி பணிகளின் நிலை முக்கிய பங்காற்றவுள்ளது.

2014ம் ஆண்டு தேர்தலில் ராகுல்காந்தியை எதிர்த்து தற்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும் தற்போது வரை அவர் அரசியல் பலத்துடன் உள்ளார். இவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராகுல்காந்தியை தாக்கி பேசி வருகிறார். இந்த மாதத்தில் மின்னணு கிராம தொடக்க விழாவிலும் இதை நிலைப்பாட்டை ஸ்மிருதி ராணி கடைபிடித்தார்.

10 வளர்ச்சி பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேஹர் ஆகியோருக்கு கடந்த 15 நாட்களில் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளில் 6 திட்டங்கள் 2013&14ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட வையாகும். சாலை, ரெயில்வே, அமேதி கேந்திர வித்யாலயா உள்ளிட்ட திட்டங்கள் தற்போது வரை கிடப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Why Amethi projects sanctioned in 2013 are still pending? Rahul Gandhi asks Modi govt