பெங்களூரு,

ஸ்ரோவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இவர் தனது கனவு படிப்பான வானூர்தி எஞ்சினியரிங் படிக்க எம்ஐடியில் சேர்ந்து, பின்னர் பண வசதி இல்லாமல் படிப்பை தொடர முடியாமல், தனது குடும்பத்தினருடன் விவசாயம் செய்து, அதன் வாயிலாக கிடைத்த பணத்தின் மூலம் தனது கனவு படிப்பை தொடர்ந்து, இன்று இஸ்ரோவின் தலைவராக வந்துள்ளார்.

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிவன், இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விவசாய குடும்பத்தை சேர்ந்த சிவன், ஆரம்ப காலத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளை கிராமத்தில் தமிழ் மீடியத்திலேயே படித்தவர். பள்ளிப்படிப்பை முடித்த தவர்  மேல்படிப்பாக  இஞ்சினியரிங் படிக்க விரும்பி னார். ஆனால் பண வசதி இல்லாததால் 1974ம் ஆண்டு  நாகர்கோவில் உள்ள இந்து காலேஜில் பிஏ மேக்ஸ் (கணிதவியல்) படித்தார். அதில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

இதன் காரணமாக அவர் ஸ்கார்ஷிப் உதவியுடன்  சென்னையில் உள்ள எம்ஐடி கல்லூரியில்  வானூர்தி பொறியியல் (ஏரோனாட்டிக்கல் இஞ்சினியரிங்)  படிக்க சேர்ந்ததார்.  இந்த  கல்லூரியில்தான் முன்னாள் அணுவிஞ்ஞானியான  ஏவுகணை நாயகனும்,  ஜனாதிபதியுமான ஏபிஜே அப்துல்கலாம் படித்தது வந்தார்.

ஆனால், பணப்பிரச்சினை காரணமாக சென்னை எம்ஐடியில் தனது படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.  அதன் காரணமாக  தனது படிப்பை இடையில் நிறுத்தும் சூழல் உருவானது.

அதைத்தொடர்ந்து ஊருக்கு சென்று தனது குடும்பத்தினருடன் இணைந்து சில காலம் விவசாய பணிகளை மேற்கொண்டார். அவரது அம்மா உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் விவசாய பணிகளில் ஈடுபட்டனர். ஆனால்,  அவரது விண்வெளி கனவு தொடர்ந்துகொண்டே இருந்தது.

இந்நிலையில், விவசாயம் செய்ததினால் கிடைத்த வருமானம் மற்றும்,  மா மாரங்களில் விளைந்த மாங்காய்களை விற்பனை செய்தும், அதன் காரணமாக கிடைத்த பணத்தைக்கொண்டு அவரது பெற்றோர் சிவன் பிள்ளையின் கனவை தொடர, மீண்டும் படிக்க சென்னைக்கு  அனுப்பி வைத்தனர்.

சென்னை எம்ஐடியில் சிவன்பிள்ளை எடுத்த  வானூர் பிரிவைதான் அப்துல்கலாம் எடுத்து வடித்துவந்தார். 1980ம் ஆண்டு  எம்ஐடியில் படிக்கும்போது,   அப்துல் கலாமுக்கு  பேட்ஜ் நம்பர் 4 என்றும், தன்னுடைய பேட்ஜ் எண் 29 என்றும் 25 ஆண்டுகளுக்கு பிறகு சிவன் நினைவு கூர்ந்தார்.

அதைத்தொடர்ந்த எம்.இ ஏரோஸ்பேஸ் பொறியியல் ஐஐடியில் படித்த சிவன்,1980ம் ஆண்டு தனது படிப்பை நிறைவு செய்தார். அதைத்தொடர்ந்து 1982ம் ஆண்டு இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார்.

தற்போது சிவனின் 60வது வயதில் அவர் இஸ்ரோவின் சேர்மனாக பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் இஸ்ரோவின் தலைவராக நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று கார்டோசார்-2 என்று இஸ்ரோவின் 100வது  ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.

சிவன்பிள்ளை தற்போது விக்ரம் சாராபாக் ஏவுகணை தளத்தின் டைரக்டராக உள்ளார். தற்போதைய இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் ஓய்வுபெறுவதை தொடர்ந்து, அந்த பதவிக்கு சிவன்பிள்ளை நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிவன்பிள்ளை  இஸ்ரோ மற்றும் துணை நிறுவனங்களில் பணிபுரியும் போது, பல சேட்டிலைட் வெளியீட்டு வாகனம் (பிஎஸ்எல்வி) திட்டத்தை மேம்படுத்துவது உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு சிவன் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

இஸ்ரோவின் பயிற்றுவிப்பாளராகவும், மிஷன் திட்டமிடல், மிஷன் வடிவமைப்பு, மிஷன் ஒருங்கிணைப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றிலும் அவரது பங்களிப்பு உள்ளது.

பிஎஸ்எல்விக்கு வடிவமைக்கப்பட்ட நோக்கம் வடிவமைப்பு செயல்முறை மற்றும் புதுமையான பணி வடிவமைப்பு உத்திகள், ஜிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி-எம்.கே 3 மற்றும் ஆர்.எல்.வி-டி.டி. வி.எஸ்.எஸ்.சி படி, அனைத்து டி.வி. டிஜெக்ட் சிமுலேஷன் சாப்ட்வேர் மென்பொருளான எஸ்.டி.டராவின் பிரதான வடிவமைப்பாள ராகவும் விளங்குகிறார்.

மேலும், வானிலை மற்றும் காற்று நிலைகளில் எந்த நாளில் சாத்தியமான ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்கிய ஒரு புதுமையான நாளான வெளியீட்டு காற்று சார்பற்ற மூலோபாயத்தை அவர் உருவாக்கி செயல்படுத்தினார்.

இந்திய தயாரிப்பான சி.எஸ்.எல்.வி  ராக்கெட்  மூலம் செவ்வாய்க்கு  (மார்ஸ்) ராக்கெட் அனுப்பிய பணியின் முதுகெலும்பாகவும், அந்த பணியைத் தொடங்குவதற்கான திட்டமிடல் மற்றும் உருவாக்குவதிலும் சிவன் பிள்ளை முன்னணியில் செயல்பட்டார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்எல்வி தொழில்நுட்ப பணியில் இணைந்தத வரலாற்று சாதனையை படைத்து வருகிறார்.

இவருக்கு, கடந்த 2007ம் ஆண்டு இஸ்ரோவின் மெரிட் அவார்டு, 1999ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விருது மறறும் டாக்டர் பிர்ன் ரோய் விண்வெளி அறிவியல் விருது பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு ஐஐடி பாம்பேயில் ஏரோ ஸ்பேஸ் குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

சிவன்பிள்ளைக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.