சென்னை: வடசென்னையின் முக்கிய பாலனமான யானைகவுனி மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த பாலம் எப்போது கட்டுமானம் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

வடசென்னைக்கும் சென்னை சென்ட்ரலுக்கும் இடையே முக்கியமான இணைப்பாக கருதப்படும் யானைக்கவுனி பாலம் சேதமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு புதிய பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை தொடங்கியது. ஆனால் பாலம் கட்டுமான பணி குறிப்பிட்ட காலத்திற்குள் முடியாததால் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில்  கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து கூறிய தெற்கு ரயில்வே அதிகாரிகள் , கொரோனா பெருந்தொற்றின் காலத்தில் போடப்பட்ட ஊரடங்கு மற்றும் ஒப்பந்ததாரரின் நிதி சிக்கல்கள் காரணமாக பிப்ரவரி 2023 வரை இந்த திட்டம் தாமதமானது என்றும், 50:50 பகிர்வு அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் தெற்கு ரயில்வே (SR), ஏழு ரயில் பாதைகளின் குறுக்கே உள்ள தூண்களை இணைக்கும் கர்டர்களின் முக்கியமான தொடக்கத்தை ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே அதன் மகத்தான தன்மையால் திட்டத்தை நிறைவேற்றுவதில் தொழில்நுட்ப சவால்களை சமாளித்து விட்டது என்று கூறிய நிலையில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவடையும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.