டெல்லி: விதிகளை மீறியதாக 36,7000 பயனர்களின் கணக்குகள்  2022 டிசம்பர் மாதம் மட்டும் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தகவல் வளியிட்டு உள்ளது.

இந்தியாவில் அதிக பயனர்களைக்கொண்ட சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் முதன்மை சமூக வலைதளமாக செயல்பட்டு வருகிறது.  50 லட்சத்துக்கும் மேற்பட்ட  பயனர் களை கொண்டுள்ளது. இதுபோன்ற சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்பப்பட்டு, தேவையற்ற பிரச்சினைகள் எழுவதால், சமூக வலைதளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி,  சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு மாதமும் இணக்க அறிக்கையை வெளியிட வேண்டும். இதன்படி, டிசம்பர் மாதம்  வாட்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் விதிமுறைகளை மீறி செயல்படும் கணக்குகளை முடக்கி அதன் புள்ளி விவரங்கள் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் விதிகளை மீறியதாக இந்தியாவில் மட்டும் 36,7000 பயனர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் 13 லட்சத்து 89ஆயிரம் கணக்குகள் எந்தவித புகாரும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட நவம்பர் மாத தகவலில்,  37.16 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகளை நிறுவனம் முடக்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மேலும் அதிகரித்து உள்ளது. இவ்வாறு முடக்கப்பட்ட, 37 லட்சம் கணக்குகளில், 10 லட்சம் கணக்குகள் பிறரின் எந்த வித புகாரும் இன்றி வாட்ஸ் ஆப் நிறுவனம் தாமாகவே கண்காணித்து முடக்கியுள்ளதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மத்திய அரசின் 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக பயனர்களின் கணக்குகள் முடக்கப்படுவதாக தெரிவித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக முடக்கப்படும் பயனர்களின் எண்ணிக்கை  மாதாமாதம் உயர்ந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளளது.

வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு விதிமுறைகளை யாரேனும் தொல்லை தரும் பட்சத்தில் அவர்கள் புகார் அளிக்கலாம். முறையான அங்கீகாரம் பெறாமல் ஒரே நேரத்தில் ஸ்பாம் செய்திகளை அனுப்பக்கூடிய கணக்குகள், சாதி, மத, இன மோதல்கள், வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுத்துபவையாக இருக்கும் கணக்குகள், பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கும் கணக்குகள் ஆகியவை தடை செய்யப்படும்.

முறைகேடான அல்லது ஸ்பாம் கணக்கு என்று அறிந்த கணக்குகள் பற்றிய புகாரை grievance_officer_wa@support.whatsapp.com என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம். மேலும், வாட்ஸ்அப் ஒரு உதவி மையத்தை உருவாக்கியுள்ளது. அதில் யூசர்கள் தங்கள் சந்தேகங்களை முன்வைக்கலாம். மேலும், இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் கிரீவன்ஸ் சென்டருக்கு தங்கள் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் புகார்களை கடிதம் மூலமாக அனுப்பலாம்.

ஒரு குறிப்பிட்ட வாட்ஸ்அப் கணக்கைப் பற்றி புகார் அளிக்கும் போது, அந்த எண்ணின் நாட்டின் குறியீடுடன் அனுப்ப வேண்டும். உதாரணமாக இந்திய வாட்ஸ்அப் எண்ணை புகார் அளித்தால், +91 என்பதை சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.