‘வாட்ஸ்-அப்’நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ்: 2019ல் பதவி ஏற்பு

டில்லி:

மூக வலைதளமான வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக  பிரபல எஸ்டாப் நிறுவனத் தின் இணை நிறுவனராக இருந்த அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் அடுத்த ஆண்டு பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் 130 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் சமூக வலை தளத்தில், இந்தியாவிலும்  சுமார் 20 கோடி பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

அபிஜித் போஸ். பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை இயக்குனராக இருந்து வருகிறார். தற்போது அவர் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் 2019ம் ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்பார் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சமீபத்தில் போலி செய்திகளை தடுக்கும் பொருட்டு, வாட்சம் நிறுவனம் அமைத்துள்ள கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அபிஜித்தை இந்திய தலைமை அதிகாரியாக வாட்ஸ்அப் நிறுவனம் நியமித்து உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: WhatsApp appoints Abhijit Bose as head of WhatsApp India, ‘வாட்ஸ்-அப்’நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ்: 2019ல் பதவி ஏற்பு
-=-