வாட்ஸ் ஆப் குழு உறுப்பினர்கள் தகவல் பதிவிடுவதை நிறுத்த அட்மின்களுக்கு அதிகாரம்….புதிய வசதி அறிமுகம்

வாஷிங்டன்:

வாட்ஸ் ஆப் குழுவில் இதர உறுப்பினர்கள் தகவல்கள் பதிவிடுவதை நிறுத்தும் அதிகாரம் அட்மின்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் குழு அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குழுவில் உள்ள இதர உறுப்பினர்கள் தகவல்கள் பதிவிடுவதை அவர்களால் நிறுத்த முடியும். இதன் மூலம் குழுவில் உள்ள எந்தெந்த உறுப்பினர்கள் தகவல்களை பதிவிடலாம். யாரெல்லாம் தகவல் பதிவிட வேண்டிய அவசியம் இல்லை என்பதை அட்மின்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

இந்த அனுமதி வழங்கப்படாத உறுப்பினர்கள் மெசேஜ், புகைப்படம், வீடியோ, ஆடியோ, ஜிஐஎப் போன்ற எதையும் பதிவிட முடியாது. ஆனால், இவ்வாறு அனுமதி வழங்கப்படாத உறுப்பினர்கள் குழுவில் பகிரப்படும் இதர தகவல்களை வாசிக்கலாம். பின்னர் தனிப்பட்ட முறையில் (மெசேஜ் அட்மின் ஆப்ஷன்) அட்மின்களுக்கு இதற்கு பதில் அனுப்பலாம்.

இந்த வசதியை பயன்படுத்த ‘குரூப் இன்ஃபோ ஆப்ஷனுக்கு சென்று ‘குரூப் செட்டிங்ஸை’ தேர்வு செய்து ‘செண்ட் மெசேஜை’ கிளிக் செய்ய வேண்டும். இந்த புதிய வசதி அனைத்து ஐஒஎஸ் மற்றும் ஆந்த்ராய்டு மொபைல்களில் கிடைக்கும். அட்மின்கள் ‘ஆல் பார்ட்டிஷிபன்ட்ஸ்’ மற்றும் ‘ஒன்லி அட்மின்ஸ்’ என்ற ஆப்ஷனில் தேர்வு செய்வதன் மூலம் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம்.

இதில் முதல் ஆப்ஷனை தேர்வு செய்வதன் மூலம் அட்மின்கள் உள்பட அனைத்து உறுப்பினர்களும் தகவல்களை பகிரலாம். 2வது ஆப்ஷனை தேர்வு செய்தால் அட்மின் மட்டுமே தகவல்களை பகிர முடியும். அல்லது அவர் இல்லாத பட்சத்தில் குழுவில் உள்ள ஒரு உறுப்பினர் தகவல்களை பகிர வேண்டும் என்று நினைத்தால் அந்த நபரை குரூப் அட்மினமாக நியமிக்க வேண்டும். அப்போது தான் அவரால் தகவல்களை களை பகிர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: WhatsApp allows group admins to stop other members from texting, வாட்ஸ் ஆப் குழு உறுப்பினர்கள் தகவல் பதிவிடுவதை நிறுத்த அட்மின்களுக்கு அதிகாரம்....புதிய வசதி அறிமுகம்
-=-