சென்னை:
வாக்கு எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்ன? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் சென்னையில் வாக்குப் பதிவு மிக மந்தமாகவே இருந்தது. பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்ட நிலையில், மொத்தமாக 200 வார்டுகளிலும் சரசாரியாக சுமார் 45க்கும் குறைவான சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்ன? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், இதுவரையிலும் தமிழகத்தில் நடைபெறாத அளவில் இந்த உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று உள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில் பெரிதாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை; படித்த மேதைகள் வாக்களிக்க வரவேண்டும். சென்னையில் வாக்கு எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு வெறுப்பு காரணம் அல்ல; நிறைய மக்கள் நேற்று சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.