பட்ஜெட்டில் புதைந்து கிடக்கும் வில்லங்க அறிவிப்புகள்

Must read

டெல்லி:

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜேட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் திட்டங்கள் மட்டுமே வெளிப்படையாக அறிவிக்கப்படடுள்ளது. ஆனால்.பட்ஜெட்டில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றிருப்பது தற்போது வெளியாகி வருகிறது. அதன் விபரம்…


* 2018-19ம் நிதியாண்டு முதல் குறித்த நேரத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. தவணை தேதியை கடந்து, டிசம்பர் 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதர விஷயங்களில் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

2. சிறு வரி செலுத்துவோர் அல்லது ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாதவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்குள் மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.

வருமான வரி கணக்கு தாக்கலை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அபராதம் விதிக்கும் அமல்படுத்தப்படுகிறது. 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

* ரூ. 5 லட்சம் வரையிலான வருவாய் உள்ளவர்களுக்கு 2017-18ம் ஆண்டு முதல் வருமான வரியில் 5 சதவீத விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுய தொழில், ஒப்பந்தகாரர்கள், தொழில் முறை வல்லுனர்களுக்கு இது பொருந்துமா என குறிப்பிடப்படவில்லை.

*ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாடகைக்கு டீ.டி.எஸ் 5 சதவீதம் ஆண்டிற்கு ஒரு முறை பிடித்தம் செய்ய வேண்டும். இதற்காக வாடகை செலுத்துவோர் டிடிஎஸ் எண் பெற வேண்டியது கிடையாது. இதன் மூலம் உரிமையாளர்கள் பயனடைவார்கள்.

*நாள் ஒன்றுக்கு ஒரு நபரிடம் இருந்து ரூ. 3 லட்சத்துக்கு மேல் யாரும் பணம் ரொக்கமாக வாங்க கூடாது. இது ஒரு முறை பரிமாற்றம் மற்றும் ஒரே நிகழ்வுக்கான பரிமாற்றத்துக்கும் பொருந்தும். இதை மீறினால் அதே அளவு தொகை அபராதம் விதிக்கப்படும். நல்ல காரணங்களுக்காக இந்த பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதை நிரூபித்தால் அபராதத்தில் விலக்கு அளிக்கப்படும்.

*தொழிலதிபர்கள் ரொக்க பரிமாற்றத்தை கையாண்டால் வரி விலக்கை இழக்க வேண்டி வரும். மேலும், நிலம் மற்றும் மூலதன நிதி பரிமாற்றத்திற்கு ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்தால் தேய்மானம் மற்றும் மூலதன விதிகளின் கீழ் வரி விலக்கு பெற இயலாது. அதேபோல் ஒரு நபர் தினமும் 10 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றம் செய்தால் தொழில் அல்லது தொழில்முறை லாபம் மற்றும் ஆதாயத்தின் கீழான வருவாயில் இருந்து விலக்கு பெற முடியாது.

*பான் விதியை கடுமையாக்கும் வகையில் புதிய பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பண செலுத்துதலுக்கு பான் எண்ணுடன் கூடிய டீ.டி.எஸ் பிடித்தம் மேற்கொள்ள வேண்டும். பான் நம்பர் இல்லாத பண செலுத்துதலுக்கு இரு மடங்கு டீ.டி.எஸ்தொகை வசூல் செய்யப்படும்.

*பொய்யான தகவல்களை சமர்ப்பிக்கு கணக்காயர், பதிவு பெற்ற மதிப்பீட்டாளர், வங்கி வர்த்தகள் ஆகியோருக்கு கடுமையான அபராதம் விதிக்கும் அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

More articles

Latest article