எந்த வயதுவரை பாலுறவு கொள்ளலாம்?

அறிவோம் அந்தரங்கம்: 10:   டாக்டர் காமராஜ் பதில்கள்

வாசகர்கள் பாலியல் தொடர்பான தங்கள் சந்தேகங்கள் -கேள்விகளை  aaasomasundaram@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தங்களது பெயர், ஊர் வெளியிடப்படமாட்டாது.

கணவன் – மனைவி எந்த வயதுவரை பாலுறவு கொள்ளலாம்? வயதான காலத்தில் எவ்வளவு பேர் பாலுறவு கொள்கிறார்கள்? இவர்களின் பாலுறவு சிறக்க என்ன வழி?

கணவன் மனைவி இருவரும் வாழ்நாள் முழுவதும் பாலுறவில் ஈடுபடலாம். வயதுக்கு ஏற்பவும், விருப்பத்துக்கு ஏற்பவும் முறைகளை மாற்றிக் கொள்ளலாம்.  வயதாகும்போது ஆண்களுக்கு உடனேயே விறைப்புத்தன்மை ஏற்படுவது இல்லை. மனைவி நேரடியாக கைகளினாலும், வாயினாலும் ஆணுறுப்பைத் தூண்ட வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரை வயதான காலத்தில் பாலுறவின்போது வலி ஏற்படுவதைத் தவிர்க்க கே-ஒய் ஜெல்லி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆண்களில் எழுபது வயதில் 65 சதவீதம் பேர் பாலுறவில் ஈடுபட நினைக்கிறார்கள்.ஆனால் 30 சதவீதம் பேர்தான் நன்கு ஈடுபடுகிறார்கள். எண்பது வயதில் 50 சதவீதம் போர் உறவில் நாட்டம் உள்ளவர்கள். ஆனால், பெரும்பாலோருக்கு அது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

ஆண் உயரமாகவும், பெண் ஆணைவிட உயரம குறைவாகவும் இருந்தால்  மட்டுமே ஆணால் சிறப்பாகப் பாலுறவு கொள்ள முடியும் என்றும், மாறாக பெண்ணை விட ஆண்  உயரம் குறைவாக இருந்தால் அவனால் சிறப்பாகப் பாலுறவு கொள்ள இயலாது என்று சிலர் கூறுகிறார்கள். இது உண்மையா?

ஆண், பெண் உயரத்துக்கும் பாலுறவுக்கும் தொடர்பு இல்லை. மாறாக, பாலுறவைப் பற்றிய ஆழ்ந்த அறிவும் அனுபவமும் தான் நல்ல மன நிறைவுள்ள பாலுறவைத் தரும்.

 பாலுறவில் ஈடுபடும்போது மனம் எவ்வாறு இருக்க வேண்டும்? பாலுறவில் ஈடுபடுவதற்கு தகுந்த சூழ்நிலைகள் என்ன? பலவகையான  பாலுறவு முறைகள் குடும்பப் பெண்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா? செக்ஸ்  செயலில் பெண்கள் வெளிப்படையாக எதையும் சொல்வதில்லை. எனவே அவர்கள் எதிர்பார்ப்புகளைத் தெரிந்துகொள்வது எப்படி?

 நல்ல மனநிலையில் இருக்கும்போது  பாலுறவில் இன்பம் அதிகமாக இருக்கும். தம்பதியினருக்கு மனத்தில் நிறைவும், நெருக்கமும் ஏற்படும். ஒரே நிலையில், ஒரே நேரத்தில் [இரவில்], ஒரே படுக்கையில் உடலுறவில் ஈடுபடுவது சலிப்பைத் தரும். ஒருநாள்  காலையில், ஒருநாள் பகலில், ஒரு நாள் மாலையில் என நேரத்தை மாற்றி பாலுறவில் ஈடுபடும் போது கிளர்ச்சி அதிகமாக இருக்கும். இதேபோன்று இடத்தையும், முறையையும் மாற்றிக் கொள்ளலாம்.

 ‘பாலுறவில் பெண்கள் ஆர்வம் காட்டுவது தவறு, பல்வேறு வகையில் பாலுறவில் ஈடுபடுவது குடும்பப்  பெண்களுக்கு அழகல்ல’ என்பது போன்ற தவறான நம்பிக்கைகள் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. அவற்றைப் போக்கி நல்ல செக்ஸ் அறிவை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். பெண்கள்  செக்ஸில் ஆர்வம் காட்டும்போது நீங்கள் அதை உற்சாகப்படுத்தி வரவேற்க வேண்டும். பெண்களுடன் மனம் திறந்து பேசுவதன் மூலம் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ளலாம்.

 எனக்கு இப்போதுதான்  திருமணமாகி உள்ளது. மனைவி ரொம்ப வெட்கப்படுகிறாள். நான் எப்படி நடந்து கொள்வது? ஏதேனும் நுட்பங்களை விளக்கினால் உதவிகரமாக இருக்கும். எனக்கு வயது முப்பது. அதிக நேரம் பாலுறவு நீடிப்பதற்கும், விந்து சீக்கிரம் வெளியேறாமல் இருப்பதற்கும் என்ன செய்ய வேண்டும்?

செக்ஸ் இயற்கையானது என்பதால் அதைப்பற்றி யாரிடமும் எதையும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்ற  கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தொடர்ந்து செக்ஸ்  பற்றி வல்லுநர்கள் எழுதிய நூல்களைப் படித்து புதிய புதிய  விவரங்களைக் கற்றுக் கொள்ளுங்கள், நல்ல மனநிறைவுள்ள பாலுறவுக்கு  அறிவும், பயிற்சியும் மிகவும் அவசியம்.

நேரடியாகப் பாலுறவில் ஈடுபட வேண்டாம். முதலில் காதலுடன் பேசுங்கள். பாலுறவுக்கு முன்பு மனதளவு  நெர்க்கத்தை பெண்கள் பெரிந்தும் விரும்புகிறார்கள்.

 முத்தமிடுங்கள். முத்தமிடுவதில் நூறு முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. புதிய புதிய  முறைகளில் முத்தம் கொடுங்கள்.  பெண்ணின் உடல் முழுவதும் செக்ஸ் உறுப்பாக எண்ணித் தொட்டுத் தடவுங்கள், தழுவுங்கள். மார்பகங்கள் மற்றும் பெண்ணுறுப்பை மட்டும் கையாளும்போது பெண்கள் எரிச்சலடைகிறார்கள். உடல் முழுவதும் தொடும்போது எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை உங்கள் மனைவியின் காதுகளில் கிசுகிசுப்பாகக் கூறுங்கள்.

 மார்பகங்கள், பெண்ணுறுப்பு ஆகியவற்றை மிக மென்மையாகக் கையாளுங்கள். 90 சதவீதம்  கருத்து என்ன வெனில், ஆண்கள் தமது சுய இன்பத்துக்காக மார்பகங்களை அழுத்திப் பிசைகிறார்கள் என்பதுதான். அவ்வாறு செய்வதால் பெண்களுக்கு இன்பக் கிளர்ச்சிக்குப் பதிலாக வலியும் எரிச்சலும் ஏற்படக்கூடும். மார்பகக் காம்புகளை மிகவும் மென்மையாகத் தொட வேண்டும்.

Tags: What age can you have sex with?: sexual-doubts-questions-and-answers-by-dr-kamaraj-10, எந்த வயதுவரை பாலுறவு கொள்ளலாம்?