வார ராசிபலன்: 7-12-18 முதல் 13-12-18 வரை! வேதா கோபாலன்

மேஷம்

நண்பர்களோ, உறவினர்களோ.. நம்பறதுக்கும் ஒரு அளவு வேணும் இல்லையா? கிரெடிட் கார்ட் பின் நம்பரையும் ஈமெயிலின் பாஸ்வேர்டையுமா கொடுப்பாங்க? அலர்ட்டா இருங்கப்பா. உத்யோகத்தில் நல்ல முறையில் முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை  கிடைக்கும். வயிறு சம்பந்தமான சின்னப் பிரச்சினைகள் .. சருமம் பற்றிய டென்ஷனுங்க.. உஷ்ணம் காரணமாய் ஏற்பட்ட உடல் நலக்குறைவு.. எல்லாமே இன்னும் ஓரிரு வாரத்திலி டோட்டலா முடிவுக்கு வருங்க. அதைப் பற்றித் தூங்காமல் கவலைப்பட்டுக்கிட்டிருக்காதீங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 5 முதல் 8 வரை 

ரிஷபம்

சகோதர சகோதரிகளுடன் குருக்ஷேத்திர யுத்தமெல்லாம் வேண்டாம். அவங்ககிட்டதான் ஹெல்ப் வாங்கப் போறீங்க கொஞ்ச நாளில். அட அவங்களே உங்ககிட்ட ஹெல்ப் வந்தாலும் என்னங்க?  இறங்கி வந்து செய்யணும்ல? மாணவர்களுக்கு வெற்றி. உங்க உழைப்பால் வர்ற வெற்றி ஒரு பங்குன்னா உங்க ஆசிரியர்கள் /ஆசிரியைகள் உங்க மேல வெச்ச நம்பிக்கை காரணமா மறுபாதி. குழந்தைகளுக்கும் கணவருக்கும் நன்மைகள் நடக்கும். குழந்தைகளின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டு அவர்களுக்கு நன்மையும் பாராட்டும் கிடைக்கும். மனசுக்கு சந்தோஷம் தரும் நிகழ்வுகள் நடக்கும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 8 முதல் 10 வரை 

மிதுனம்

வெளியூரில் அல்லது வெளிநாட்டில் அல்லது அல்லது உள்ளூரில்  உள்ள வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சாப்பிட நேரமில்லை. தூங்க நேரம் இல்லைன்னு அலவலகத்தில் வேலை அழுத்தும். டென்ஷன் ஆகாதீங்க. இதற்கு இபபோதைக்குப் பலன் இல்லைன்னு மனசைப் போட்டு உழப்பிக்காதீங்க. பொறுமைதான் இப்போதைக்கு உங்க தாரக மந்திரம்னு நினைச்சுக்குங்க. கண்டிப்பா.. கட்டாயமா.. நிச்சயமா.. ஷ்யூரா.. உறுதியா இதற்குப் பலன் சீக்கிரத்தில் கிடைக்கும். அதுவும் நீங்க விரும்பின நல்ல பலனாவே இருக்குங்க. எதில்பாலினத்து நண்பர்களால் நன்மைகள் நிறைய நடக்கும்.

 சந்திராஷ்டமம் : டிசம்பர் 10 முதல் 13 வரை 

கடகம்

இத்தனை காலம் கல்வியில்  நாட்டமின்றி இருந்த குழந்தைகள் திடீரென்று ஆர்வம் வரப்பெற்று நல்ல முறையில் படித்து உயர்ந்து உங்களுக்கு நிம்மதி அளிப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி உண்டு. மன சாட்சியை மட்டும் அப்பப்ப கன்சல்ட் செய்துக்குங்க. எதற்கெடுத்தாலும் கோபப்படணும்னு வெச்சிருக்கீங்களே அந்த  பாலிசியை மட்டும் மாத்திக்குங்க.. நீங்க எது செய்தாலும் உங்களுக்கும் சரி மத்தவங்களுக்கும் சரி நன்மையில்தான் முடியணும் என்கிற உறுதியுடன் செயல்படுங்க. அது போதும். அலுவலக /சொந்த விஷயமாகவும் வெளியூர் வெளிநாடு என்று போக வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டுப் பயணம் கன்ஃபர்ம் ஆகுமுங்க.

சிம்மம்

குடும்ப நிகழ்வுகளில் சற்று மெதுவான போக்கு இருக்கலாம். அதைக்  கண்டு பயம் எதுவும் வேண்டாம். எது எப்போ நடக்கணுமோ அது அப்போ நடந்தால்தான் நமக்கும் த்ரில் இருக்கும். திருமணமாகிக் காத்துக் கொண்டிருந்தவங்களுக்குப் பாப்பா பிறக்கும். டாட்டா போகத் திட்டமிட்டிருந்தீங்க. நடக்கும். விசாவுக்குக் காத்திருந்தால் அதுவும் கைகூடும். விசா கிடைச்சாச்சு. அத்தனை நிதானப்போக்குக்கு இடையேயும் மின்னல் போல் திடீர் அதிருஷ்டமும் திடீர் லாபமும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலைபார்க்கும் இடத்தில் நல்லபெயர் எடுப்பீங்க. விரைவில் சம்பள உயர்வு கிடைக்கும்

கன்னி

உடல் நிலையை நன்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதுக்காக உடனே பயந்துடாதீங்க. நத்திங் சீரியஸ். உங்களுக்கு வாக்குப் பலிதம் அதிகமாகும். எனவே எதிரிக்கும் தீங்கு வராதமாதிரிப் பேசுங்க. அந்த வார்த்தைகளின் பலன் உங்களுக்கும் இருக்கும்ல. எதிலும் சிறு தடங்கல்களும் தாமதங்களும் இருந்தாலும்  தடைகளைத் தாண்டி வெற்றி கிடைக்கும்.  கணவருக்கும் (அ) மனைவிக்கும்  உங்களுக்கும் கொஞ்ச நாளாய் ஃபைட்டிங் ஃபைட்டிங் இருந்துக்கிட்டிருக்குமே. விட்டுக் கொடுத்துடுங்களேன்.  மற்றவர்களிடம் கல்கண்டு மாதிரிப் பேசி நல்ல பெயர் எடுக்கறீங்கல்ல? வீட்டில் மட்டும் ஏன் வேற மாதிரி டென்ஷன் முகத்தைக் காட்டிக்கிட்டிருக்கீங்க?

துலாம்

தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பழகுங்க. பணம் புழங்கும் இடத்தில் வேலை பார்க்கறவங்க கண்ணை விரிச்சுக்கிட்டுப் பணம் எண்ண வேண்டும். தினமும் வேலைபார்க்கும் இடத்தைப் பற்றி வீட்டில் வந்து புலம்பறீங்க. ஆனால் இது போல் ஒரு அலுவலகம் கிடைக்குமா? சில சமயங்கள் ஒரு வார்த்தை சொல்லதான் சொல்லுவாங்க. பாவம் உங்க தப்பு இல்லைதான், உங்களுக்குக் கீழே வேலை பார்க்கறவங்களோட அலட்சியத்தால உங்களைக் கேள்வி கேட்கறாங்க. பொறுமையாப் போங்க. உங்க திறமையையும் உங்க மேலதிகாரிங்க எல்லாரும் மனசுக்குள்ளயும் தங்களுக்கிடையேயும் பாராட்டிக்கிட்டுத்தான் இருக்காங்க., அது தெரியுமா உங்களுக்கு? குட் லக்

விருச்சிகம்

கார் வாங்கப் போறீங்க. அதுவும் அழகாய் உங்க விருப்பப்படியே அம்சமாய் அமையும். வீடு வாங்கவும் உகந்த சமயம் இதுதான்.  செலவு டென்ஷன் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் சந்தோஷம் மன நிறைவு எல்லாமும் கிடைக்கும். பயணம் போவீங்க. நிறையப் பயணம்! பெரிய பயணம்! எல்லாமே அலுவலகம் சார்ந்த பயண மாய் இருக்கும். வேலையை நல்லபடி முடிச்சு நல்ல பெயர் எடுப்பீங்க.  எனினும் நீங்க திட்டமிட்ட ஆன்மிகப் பயணம் கைகூட இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டி வருமுங்க. நீங்க காத்துக்கிட்டிருந்த  புது வேலை இன்னும் சில மாதங்களில் கிடைக்கும். தகவல் இப்பவே  வந்துடும்.

தனுசு

ஆரோக்யத்தைக் கெடுக்கும் பழக்க வழக்கங்கள் கூடாது. நிதி மற்றும் உத்யோகம் சம்பந்தமான பிரச்சினை கள் மெல்லத் தீர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாய் நிலைமை சரியாகிக் கொண்டே வரும். இதையெல்லாம் ஒரு பொருடடாய் நினைச்சுக் கவலைப்படாதீங்க. இதனால் தேவையற்ற பயமோ கவலையோ டென்ஷனோ ஏற்படலாம். அதற்கு அனுமதிக்க வேண்டாம். அநாவசிய கோபம் ஏற்படாமலும் நீங்கள் மற்றவர்களைப் பார்த்து சத்தம்  போடாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களால் தவிர்க்க முடியக்கூடிய பயணத்திற் கெல்லாம் ‘நோ’ தான். வேறு வழியில்லாத அலுவலகப் பயணத்தை மட்டும் ஒப்புக்குங்க.

மகரம்

அதை இதை சாப்பிட்டு ஆரோக்யத்துக்கு எதிரியாயிடாதீங்க. ப்ளீஸ்  குடும்பத்தில் புதிய வரவுகள் மனசுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும். குறிப்பாய்க் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.. உங்களுக்கோ.. உங்கள் மகன் அல்லது மகனுக்கோ. . வேலைதான் கொஞ்சம் அதிகமா இருக்கும். ஸோ வாட் என்று கேட்கும் ரகமாச்சே நீங்க! குழந்தைகளின் முன்னேற்றம் சற்று மெதுவாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனினும்  எந்தத் தொல்லை யும் வந்த வேகத்தில் சரியாகும். கணவர்/ மனைவி வீட்டாரிடம் நல்ல பெயர் எடுப்பீங்க. தந்தைக்கு லாபங்கள். தந்தையால் லாபங்கள் ஆகியவை ஏற்படும். அதாவது தந்தை வழி உறவினர்களின் சொத்து உங்களை வந்தடையலாம். கேஸ்கள் உங்களுக்குச் சாதகமாக ஜெயிக்கும். உங்களுக்கும் திடீரென்று அதிருஷ்ட வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்

அதிரடி வேகத்தில் வந்து அலைக்கழித்த பிரச்சினைப் புயல் எல்லாம் நின்னாச்சு! பழசை நினைச்சும் புது கற்பனை செய்தும் உண்டாகும் கவலைகளையெல்லாம் தூக்கி டஸ்ட் பின்னில் போடுங்கப்பா. ஒரு விஷயம் கட்டாயம் நல்லா நினைவு வெச்சுக்குங்க. இப்போதைக்கு லோன் எதுவும் வாங்கவும் வேண்டாம் கொடுக்க வும் வேண்டவே வேண்டாம். சரியா? வீட்டில் யாருக்கோ திருமணம் நடக்கலைன்னு கவலைப் பட்டுக்கிட்டி ருந்தீங்களே. கவலை தீர்ந்ததா? ஹப்பாடான்னு ரிலாக்ஸ் பண்ணுவீங்க. அலுவலகத்தில் நல்ல தகவல் கிடைக்க இன்னும் கொஞ்சமே கொஞ்ச காலம்தான் மிச்சமிருக்கு, சற்றே பொறுமையா இருங்க. ப்ளீஸ்.

மீனம்

கணவருக்கு/ மனைவிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை பற்றிக் கதிகலங்கிப் போகாதீங்க. எல்லாம் சீக்கிரம் சரியாகக்கூடிய பிரச்சினைதான். கூகிளின் யாரோ சொன்னதையும் வலைதளத்தில் நண்பர்கள் பயமுறுத்தி யதையும் வெச்சு கற்பனை செய்து  பயப்படாதீங்க. முக்கியமான கடமைகள்  மற்றும் பொறுப்புகளிலிருந்து வழுக்கி வழுக்கி அவற்றைத் தள்ளிப்போட்டுக்கிட்டே வர்றீங்களே .. நியாயமா இது? எத்தனை பேர் உங்களை நம்பி இருக்காங்க. அவங்க நன்மைக்காக மட்டுமில்லாம உங்க நன்மைக்காகவும் வேண்டித்தான் சொல் றேன். காலம் பார்க்காமல் கணிணியின் காலடியில் உட்கார்ந்து உழைக்கறீங்களே அந்தக் கண்ணுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கக்கூடாதா? கண்சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் கவனமா இருங்க.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: weekly Rasi palan   7.12.2018 to 13.12.2018 - Vedha Gopalan, வார ராசிபலன்: 7-12-18 முதல் 13-12-18 வரை! வேதா கோபாலன்
-=-