வார ராசிபலன்: 30/11/18 முதல் 06/12/18 வரை – வேதா கோபாலன் 

மேஷம்

சின்னச்சின்ன உடல் உபாதைகளுக்கும் வயிற்றுப் பிரச்சினைகளுக்கும், சருமப் பிரச்சினை களுக்கும் டென்ஷன் ஆவாதீங்க. மனைவியுடன் / கணவருடன் இருந்து வந்த சில்லறை சண்டைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து இருவரில் ஒருவர் வெள்ளைக்கொடி பறக்க விடுவீங்க. குட் லக். தந்தை வழி உறவினர்களை மீட் பண்ணுவீங்க. உங்களைப் பார்த்தாலே மற்றவங்களுக்கு மனசில் சந்தோஷமும் பிரியமும் அதிகமாகும். அந்த அளவு நல்லவிதமாய் நடந்துப்பீங்க. மம்மிக்கு வெளிநாட்டுப் பயணம் கிட்டும். நீங்க புது வாகனம் வாங்கும்போது லேசான டென்ஷன்கள் இருக்கும். படிப்பில் தடை வராதபடி கவனமா இருங்க. இருப்பீங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 5 முதல் டிசம்பர் 8 வரை

ரிஷபம்

உத்யோக சம்பந்தமான பயணங்களில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு உடனுக்குடன் சரியாகும். மேலதிகாரிகள் உங்களை வாய்விட்டு மனசுவிட்டுப் பாராட்டும்படி அலுவலகத் தில் அட்டகாசமாய் உழைப்பீங்க. எடுத்த முயற்சிகளில் உங்கள் மனம்போல் முன்னேற்றம் இல்லை என்று புலம்பாமல் தெய்வத்தை நம்பி முயற்சியை அடர்த்தியாக்குங்கள். வின் பண்ணாமயா போயிடுவீங்க? உத்யோக சம்பந்தமாக மிக திடீர் நிகழ்வு ஒன்று உண்டுங்க.. சட்டென்று முகத்தில் பன்னீர் தெளித்த மாதிரி சந்தோஷத்தை  அது அள்ளி வழங்கும்.

மிதுனம்

திருமண வேளை வரவில்லைன்னு டென்ஷன் வேண்டாம். கொஞ்சமே கொஞ்சம் பொறுங்க. எதையும் யாரிடமும் பேசுவதற்கு முன்னால்… முக்கியமாக வாக்களிப்பதற்கு முன்பாக.. பத்து முறை மனசுக்குள் ஒரு சென்சார் போர்ட் வைத்து வன்முறை இல்லாமல் இருக்குமா என்றும் பிற்பாடு வம்பு வராமல் இருக்குமா என்றும் முழுமையாக அனலைஸ் செய்துவிட்டு பிறகு வாயைத் திறவுங்க. மகள் உங்களை மகிழ்ச்சிக்கடலில் தூக்கிப்போட்டு வேடிக்கை  பார்த்து சிரிப்பாள். அவள் என்ன சாதனைகள் செய்யவே மாட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்தீங்களோ அதையெல்லாம் செய்து அசத்திடுவா பாருங்க… காதல் உள்பட.

கடகம்

பிள்ளை ஒருபுறம் பெண் மறுபுறம் ஜமாய்ப்பாங்க. உங்களுக்கும் பெருமிதம் பெருகும். எதிர்பார்த்த லோன்கள் துரிதமாக சாங்ஷன் ஆகும். எதிர்பார்த்திருக்காத லாபங்கள் உங்க வீட்டுக்குவந்து ராசலட்சுமி கணக்கா வாசக்கதவைத் தட்டும். கணவன் மனைவியைப் பொருத்தவரை கோப முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். ஆத்திரமாக வார்த்தைகளைக் கூடையில் போட்டு மொத்தமாக அள்ளி வீச வேண்டாம். அறுவை சிகிச்சை ஆக வேண்டிய பிரச்சினை சிம்ப்பிளாய் சாதாரண சிகிச்சையிலேயே குணமாகும். கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்க வேண்டாம். கோபத்தையும் குறைங்க.

சிம்மம்

சகோதர சகோதரிங்க நல்லாயிருப்பாங்க. நீங்களும்தாங்க அவங்க தயவால் சூப்பரா இருப்பீங்க. கோபம் என்ற ஒன்றை மட்டும் ஒரு ரூம்ல போட்டுப் பூட்டி சாவியைக் கிணத்தில் போட்டுடுங்க. குழந்தைங்க தப்பு செய்யாம இருக்கும்படி வளர்க்க சற்று அதிகமா மெனக் கெடுங்க. மனசுக்கு நேர்மை இல்லாத காரியம்னு  தோன்றினா அந்த ஃபைலை ஆரம்பத் திலேயே டெலிட் செய்துடறீங்க. வெரிகுட். வாழ்க. உங்களுக்கு நீங்களே தடுப்பூசி போட்டுக்க றீங்கன்னுதான் அர்த்தம். காதலன்/ காதலி முன்பிருந்த மாதிரி இல்லாமல் சட்டென்று விலகுவது போல் தோன்றினால் எகிறாமல் மென்மையாய் உங்கள் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் சொல்லுங்க. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடுத்தெறிய வேண்டாம்.

கன்னி

எனக்கு மட்டும் ஏன் இந்தக் கஷ்டமெல்லாம் என்று புலம்பாதீங்க. எல்லாம் தற்காலிக பிரச்சனை மற்றும் உங்களின் அதீதக் கற்பனைதான். எந்த நிமிஷமும் வெளிநாடு போகத் தயாராக இருங்க. டக்கென்று  கிளம்ப வேண்டி வரலாம்.  பேச்சில் கவர்ச்சி கூடும். குடும்பத் தில் ஒருவருக்கொருவர் நெருக்கமும் பாசமும் அதிகரிக்கும். அது தலைமுறைகடந்தும் இருக்கலாம். யாருக்கேனும் பிரசவம் நிகழ்ந்து குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் நீளக் கூடும். சகோதர சகோதரிகள் நூல் ஏணியில் ஏறுவது போல் வாழ்க்கையில் மடமடவென்று ஏறிப்போவார்கள்.

துலாம்

கவரும் தன்னை ஏற்கனவஉங்களுக்கு நூறு பர்சன்ட் உண்டு. இப்போ கேட்கவே வேண்டாம். அது இதரண்டு மடங்காகும். புத்திசாலித்தனம் உங்களின் வரம். அது எப்பவும் போல் இப்ப வும் உதவும். குறிப்பாய் ஆபிஸ்ல மேலதிகாரிங்க கிட்ட சபாஷ் வாங்குவீங்க. அவங்க வாய்விட்டு சொல்லலையா? டோன்ட் ஒர்ரிங்க. மனசுல நினைச்சுப்பாங்க. அடுத்த அப்ரெய் ஸல்ல உதவும். அப்பா வழி உறவுக்காரங்களை சந்திப்பீங்க. அவங்களால நன்மை ஏற்படுங்க. குழந்தைங்க வாழ்க்கையில் க்விக்கா முன்னேற்றம் தெரியும். அவங்க கோபம் எல்லை மீற வாய்ப்பிருக்கு. அமைதியா அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போறது உங்களுக்குத்தான் நல்லது. ஆமாம். சொல்லிப்புட்டேன்.

விருச்சிகம்

டிரஸ் மற்றும் நகைங்க வாங்கறதுக்கு செலவு செய்வீங்க.   யாருக்காச்சும் கல்விக்கு உதவி செய்வீங்க. அல்லது உங்க் வீட்டிலேயே வெளிநாட்டுக் கல்விக்கு யாருக்கேனும் செலவு செய்ய வேண்டி வரலாம். அம்மாவுக்கு சிறு ஆரோக்யப் பிரச்சினைங்க வரக்கூடும். உடனே உலகமே தலைகீழாக் கவிழ்ந்துட்ட மாதிரித் தலையில் கை வெச்சுக்கிட்டு உட்கார்ந் துடாதீங்க. ஒண்ணும் ஆயிடாது. முறையான சிகிச்சை கொடுத்து,  நூறு சதவீதம் ஆல்ரைட் ஆகி, சிரிச்சு வளைய வரப்போறாங்க. திடீர் வேலை மாற்றம் இருக்க வாய்ப்பிருக்குங்க. ஒரு வேளை நீங்க ஆசைப்பட்ட வங்கி வேலை அல்லது அரசாங்க உத்யோகமாகவும் அது அமையக்கூடும்.          

தனுசு

பல காலம் காத்திருந்த பெயரும் புகழும் உங்களைத் திகட்டத் திகட்டத் தேடி வரும். கலைத் துறையில் உள்ளவங்களா நீங்க? கேமரா.. நடிப்பு.. நாடகம்.., மேடைப்பாடல் என்று  தொழில் செய்பவரா? சூப்பர் நேரம் வந்தாச்சுங்க. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அடுத்தடுத்து நிகழ்ச்சிகள்  கொடுப்பீங்க. வெளிச்சம் கண்கூச மேடையில் நின்று கைதட்டல் மட்டுமின்றி, அவார்ட், ரிவார்ட்டெல்லாம் வாங்குவீங்க. எது எப்படி இருந்தாலும் பேச்சு விஷயத்தில் நீங்க அதீத கவனமா இருந்தே தீரணுங்க. “ஏதோ சும்மானாச்சும் சொன்னேன் அதைப்போய் அநியாயத்துக்கு இத்தனை பெரிய பிரச்சினையாக்கிட்டாங்க” என்று அப்புறம் புலம்பாதீங்க. சொல்லிட்டேன்.

மகரம்

நீங்கள் கனிவதற்காகக் காத்திருந்த பொற்காலம் கனிஞ்சாச்சு. ஏகப்பட்ட நற்செய்திகள்.. லாபங்கள்.. வருமானங்கள் .. என்று உங்களை சந்தோஷத்தில் அமிழ்த்தி திக்குமுக்காடச் செய்யுமுங்க. அலைச்சலும் பயணங்களும் கொஞ்சம் குறையும் முன்போல் இருக்காது. அரசாங்கத்திடமிருந்து வரவேண்டிய  நன்மைகள் ஒரு வழியாய் வந்து சேரும். இத்தனை காலமாய் இழுத்துப் பறித்துக்கொண்டிருந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். குறிப்பாகக் குடும்பத்திற்குள் நிலவி வந்த வழக்கெல்லாம் அருமையாய் முடியும். சண்டை போட்டவங்க சமாதானக்கொடி பறக்க விட்டு வருவாங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 வரை

கும்பம்

பாஸ்போர்ட் விசா கிடைக்கும். அப்பாவின் புகழ் கொடி கட்டிப்பறக்கும். அவருடைய பிசினஸ் அல்லது உத்யோகம் புதிய கோணங்களில் சிறப்பான உயரத்தை எட்டும். நண்பர்களால் நன்மை ஏற்படும். பயணங்கள் அதைவிட நன்மை தரும். குழந்தைகளுக்கு வெளியூர் வெளிநாட்டில் உத்யோகம் .. கல்வி என்று வாய்ப்புகள் வரும். எந்த நன்மையும் ஆமை மேல் ஏறி நிதானமாய்த்தான் வரும். அதுக்கு ஏங்க இப்படி முகத்தைத் தொங்கப் போட்டு வெச்சுக்கிட்டீங்க? ஒரேயடியாய் நிக்காம வந்துக்கிட்டிருக்கேன்னு சந்தோஷப்படுவீங்களா? அதை விட்டுப்புட்டு…

சந்திராஷ்டமம் : டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3 வரை

மீனம்

மன நிறைவு என்பது இதுதாங்க. எவ்ளோ காலமா காத்திருந்த நன்மைளைக் கண்ணால் பார்க்கறீங்க! உடல் ஆரோக்யம் போன வருஷம் பாடாய்ப்படுத்தியதற்கு நேர் மாறாய் இந்த வருஷம் அம்மாடின்னு நிம்மதியடைய வைக்கும். கணவருக்கும் /மனைவிக்கும் + குழந்தைங்களுக்கும் சின்னச்சின்னப் பிரச்சினைகள் வந்தால் கவலை வேணாங்க. சரியாகும். எல்லாம் சரியாகும். சீக்கிரம் சரியாகும். அடி வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்கள் பெண்கள் அதிஜாக்கிரதையா இருந்துட்டா எந்தப் பிரச்சினையையும் தவிர்க்கலாம்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5 வரை

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: weekly Rasi Palan 30-11-18 to 06-12-18 - Vedha Gopalan, வார ராசிபலன் - 30/11/18 முதல் 06/12/18 வரை வேதா கோபாலன்
-=-