வார ராசிபலன் 2-2-18 முதல் 8-2-18 வரை – வேதா கோபாலன்

Must read

மேஷம்

சின்னச்சின்ன ஆரோக்யப் பிராப்ளம்ஸ் திடீர்னு ஏற்பட்டாலும் அதே வேகத்தில் திடீர்னு சரியாயிடும். பூதக்கண்ணாடி வெச்சுப்பார்த்து கடுகு சைஸ் பிரச்சினையைப் பூசணிக்காய் என்று பயந்து பரிதவிக்க வேணாமுங்கோ. தொழில்.. உத்யோகம் சம்பந்தமாக நிறையப் பொறுப்புகள் சுமக்க வேண்டியிருக்கும். முகம் சுளிக்காமல் புன்னகையுடன் நிறைவேற்றுங்கள். வேலைப்பளு அதிகமாக ஆக.. அதற்கான வருமானமும்  அதிகமா வரப்போகுதே. அரசாங்க சம்பந்தப்பட்ட ஆர்டர்கள் வேலைகள் செய்வீங்க.

ரிஷபம்

மனசெல்லாம் இனிப்பும் மென்மையும் இருக்கையில் வெளியில் ஏன் எறிந்து விழுந்து கோபக்காரர் பட்டம் வாங்கறீங்க? சரியான பலாப்பழம் நீங்க. அலுவலகம் சம்பந்தமான ஒரு நெருடல் தீர்ந்து சஸ்பென்ஸ் விலகி மகிழ்ச்சி மீளும். குழந்தைங்க பற்றி  எதுக்குத் தேவையே இல்லாமல் கவலைப் பட்டுக்கொண்டி ருக்கீங்க? சூப்பராய்ச் சாதிப்பாங்க. இப்போதைக்கு உள்ளது தற்காலிகப் பிரச்சினை. மிகவும் தற்காலிகம்.  ஆரோக்யத்தை நல்லா கவனிச்சுக்குங்க. குறிப்பாய்க் காலில் அடி கிடி பட்டால் உடனேஏஏஏ ஆக்ஷன் எடுங்க.

மிதுனம்

பேச்சு இருக்கே பேச்சு.. அதுக்கு ஒரு ஃபில்டர் போட்டுக்குங்க. அல்லது மூடியே போட்டுக்கிட்டாலும் நல்லதுதான். மற்றபடி உங்க புத்திசாலித்தனமான நடவடிக்கைகளால் நிறையப்பாராட்டு வாங்குவீங்க. குறிப்பா உங்க மனைவி/ கணவர் கிட்டேயிருந்து.   அவங்களுக்கும் அலுவலகத்தில் பாராட்டு மழைதான். எதிலும் ஒரு நிதானப்போக்கும் நிச்சயமற்ற வேகமும் இருந்தாலும் எல்லாம் நல்லபடியா முடியும்.  நீங்க ஆனாலும் ரொம்பதான் ஆரோக்யத்தை அலட்சியப்படுத்தறீங்க. முதல்ல அதைக் கவனிங்க. பழைய பாக்கிகள் வசூலாகும். குழந்தைகங்களால் பெருமிதம் வரும்

கடகம்

கவர்ச்சி அம்சம் அதிகமாகும், லவ் ஜெயிக்கும். அப்பாவுக்கு  திடீர்னு நன்மை நடக்குமுங்க. சினிமாத்துறைல உள்ளவங்களுக்கு நல்லதெல்லாம் நடக்கும்.  படிப்பில் அசத்துவீங்க. மம்மிக்கு அவங்க மம்மி வீட்டிலேயிருந்து தங்கம் கிடைக்கும். அல்லது சொத்தில் பங்கு அல்லது வீடு வாசல் கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. குழந்தைங்களால் ஏற்படும் டென்ஷனைப் பெரிசாய் நினைச்சு வருந்தாதீங்க. ஓரிரு நாளில் எல்லாமே தலைகீழாகும். சிரிப்பும் மகிழ்ச்சியும் மீளும். பாஸ்போர்ட் விசா முயற்சிகள் மற்றும் அரசாங்கம் சம்பந்தமான மேட்டர்ஸ் ஜம்மென்று முடிந்து முகத்தில் புன்னகை வரையும் .

சிம்மம்

நண்பர்களின் பல வகை உள்ளனர் அல்லவா? அவர்கள் மெல்ல மெல்ல மாறுவாங்க. அதாவது இத்தனை நாள் நீங்க பகைவர்கள்னு நினைச்சவங்க நல்லவங்கன்னும் நண்பர்கள்னு நினைச்சவங்க உங்க முதுகுக்குப் பின்னால பேசறவங்கன்னும் ஒரு வழியாப் புரிஞ்சுப்பீங்க. விடுங்க விடுங்க. பெரிய கஷ்டம் நஷ்டம் எதுவும் இருக்காது. குடும்பத்தில் யாரேனும் வெளிநாடு செல்வதற்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கலாம். ஓய்வில்லாமல் உழைக்கறீங்க. நிறையப் பலன் உண்டுங்க. 

கன்னி

பளிச்சென்று மேடைகளில் பாராட்டுகளும் கைதட்டல்களும் வாங்குவீங்க. சற்று அடக்கி வாசிங்க. உங்க ஜாலி கமென்ட்கள் யாருக்கேனும் மனதைத் தைக்கக்கூடும். ஊசியை எடுத்து உள்ளே போடுங்க. எனினும் உங்களால் தங்களுக்கு நன்மைதான் ஏற்படும் என்பதை அவங்க உணராமலா இருப்பாங்க. மறுபடியும் உணரும்படி நீங்க நன்னயமும் செய்துக்கிட்டே போவீங்க. குடும்பத்தில் கல்யாணச் செலவு சந்தோஷம் தரும். நிற்க நேரமின்றிப் பந்தல் போடுவதை மேற்பார்வை செய்வீங்க. நிறைய  லாபங்களும் நன்மைகளும் வருவதால் செலவு பற்றிக் கவலைப்பட மாட்டீங்க. என்ஜாய். ஆல் த பெஸ்ட்.

துலாம்

மனசில் நல்ல எண்ணங்களும் செயல்களில் தர்ம சிந்தனைகளும் நிரம்பியிருப்பதால் உங்களை அனைவருக்கும் பிடிக்கும். நீங்க ரியலி கிரேட். எங்கே சிக்கனமாய் இருக்க வேண்டுமோ அங்கே சிக்கனமாயும் எங்கே கருணையை வாரி வழங்கணுமோ அங்கே தாராளமாயும் இருக்கீங்க. சூப்பர். அலுவலகத்தில் உங்க கீழே உள்ளவங்க பணிந்து நடப்பாங்க.   உதவிகரமாயிருப்பாங்க. அந்த ராணுவ டிஸிப்ளினை வீட்டிலுலோ நண்பர்களிடமோ கொண்டுவரப் பார்க்காதீங்க. திமிர் என்றோ அகங்காரம் என்றோ நினைச்சுடுவாங்க.

விருச்சிகம்

நண்பர்களுக்காக நிறையச் செலவு செய்வீங்க. ரைட். அவங்களும் உண்மையான நன்றியோட நடந்துப்பாங்க. சிஸ்டர்கள் பிரதர்கள் கொஞ்சம் முன்னே பின்னேயா நடந்துப்பாங்க. இருக்கட்டும். சரியாகும். பாவங்க. அவங்களே நீங்க உதவி செய்ய வேண்டிய நிலையில் இருக்காங்க. மனசாரச் செய்ங்க. பேச்சில் கனல் தெறிக்காம பார்த்துக்குங்க. எஸ்பெஷலி அலுவலகத்தில் பணிய வேண்டிய இடத்தில் விட்டுக்குடுத்துத்தாங்க போகணும். எதிர்பார்த்த தொகைகள் வரும். சற்றே தாமதமாக வந்தாலும் முழுசாக வரும்.

தனுசு

சற்றே நிதானமாக விஷயங்கள் நடக்கும். தேவையில்லாத விஷயங்களில் நீங்க மூக்கை நுழைக்காத வரையில் வாழ்க்கை வசந்த மயமாய்தான் போகும், அரசாங்கத்திலிருந்து பாக்கி வர வேண்டிய தொகை இருந்தால் வரும்.   கல்வி சம்பந்தமான தொழில் செய்பவராக இருந்தால் உங்களுக்கு இது லாபமான கால கட்டத்தின் துவக்கம். ஏழரைச் சனி என்றும் ஜென்ம சனி என்றும் யாராவது பயமுறுத்தினால் கவலையே வேண்டாம்.  மற்ற எட்டு கிரகங்கள் உள்ளனவே .. தவிர சனி பகவானை நீங்கள் காலைப்பிடித்துக்கொண்டு கெஞ்சினால் மனம் இறங்கிடுவார்.

மகரம்

ஒரு நாள் இருந்த மாதிரி மறுநாள் வாழ்க்கை இல்லை என்று நீங்க சொல்றீங்க. கரெக்ட்தான். இப்பல்லாம் கொஞ்ச நாளாய் நீங்க மட்டும் ஒரு நாள் இருந்த மாதிரி இன்னொருநாள் இருக்கீங்களா? உங்க கவர்ச்சி அம்சம் அதிகரிக்கப் போகுதுங்க. சினிமாத் துறைல இருக்கீங்களா. வாவ். புதிய படங்கள் புக் ஆகும்.  மற்றவர்கள் மேடைப்பேச்சு அது இது என்று பிரபலமாவீங்க. வெளியூர் வெளிநாடு என்ற காலில் ஸ்கேட்டிங்க சக்கரம் கட்டிக்கிட்டுப் பறக்கறீங்க. அதனால் லாபமும் புகழும் அதிகரிக்கும்.  அரசு உத்யோகத்தில் இருக்கறவங்களுக்கு நன்மைகள் நடக்கும். நல்ல செய்திகள் வரும். ஹும். கலக்குங்க.

சந்திராஷ்டமம்:  ஃபிப்ரவரி 1 முதல் ஃபிப்ரவரி 3 வரை

கும்பம்

உங்க விருப்பப்படியே எல்லாம் நடந்துகிட்டே போகும். நீங்க போக விரும்பிய ஊருக்கெல்லாம் போவீங்க. பல காலம் நிறைவேறாமல் பெண்டிங்கில் போட்டிருந்த பிரார்த்தனைகள் சட்டென்று நிறைவேறும். தரும சிந்தனை அதிகமாகும். தடை போடாதீங்க. சற்று சுயநல சிந்தனைகள் இருக்க வாய்ப்பிருக்கு. அனுமதிக்காதீங்க. எழுத்தாளர்கள் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புகழ், பணம் எல்லாம் வரும். செலவினங்கள் கூடினாலும் அதைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் வருமானம் வரும்.

சந்திராஷ்டமம்:  ஃபிப்ரவரி 3 முதல் ஃபிப்ரவரி 6 வரை

மீனம்

எத்தனை காலம் ஏங்கிக் காத்திருந்தீங்க இப்படி ஒரு லாபமும் வருமானமும் பார்ப்பதற்காக. பல வகை வருமானங்கள் வரும். பல காலம் பெண்டிங்கில் இருந்த தொகைகள் வந்து சேரும். குறிப்பாக வெளி நாட்டிலிருந்து வர வேண்டியவையும் அரசாங்கத்திடமிருந்து வரவேண்டியவையும் திடீரென்று கிடைத்து வியப்பில் ஆழ்த்தும்.  கலைத்துறையில் இருப்பவர்களுக்கும் வருமானம் அதிகரிக்கும். கணவரால் / மனைவியால் நன்மையும் லாபமும் கூடும். மம்மிக்கு சற்றே நிதானமான முன்னேற்றங்கள் இருக்கும்.  அதனால் என்ன?  சந்திராஷ்டமம்:  ஃபிப்ரவரி 6 முதல் ஃபிப்ரவரி 8 வரை

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article