சென்னை ஐஐடி நிர்வகிக்கும் வெப்சைட்களில் மர்ம நபர்கள் ஊடுருவல்: சைபர் கிரைம் விசாரணை

Must read

சென்னை:
சென்னை ஐஐடி நிர்வகிக்கும் வெப்சைட்களில் மர்ம நபர்கள் ஊடுருவினர். சைபர் கிரைம் போலீசார் ஊடுருவிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஐஐடி.யில் பிரத்யேக வெப்சைட் முகவரி செயல்பட்டு வருகிறது. இந்த இணையத்தில் மர்ம நபர்கள் இன்று ஊடுறுவியதை அதன் கணினி வல்லுனர்கள் கண்டறிந்தனர். மர்ம நபர்கள் ஊடுறுவியதோடு, சில மணி நேரம் வெப்சைட்டை முடக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த வல்லுனர்கள் இது குறித்து ஐஐடி இயக்குனரகத்துக்கு தகவல் அளித்தனர். இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ஊடுறுவல் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள பல்வேறு ஐஐடி மற்றும் கல்வி நிறுவனங்களின் வெப்சைட்களை சமூக விரோதிகள் இதுபோல் அடிக்கடி முடக்குவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது
 

More articles

Latest article