மேகதாது அணை குறித்து பேசி முடிவெடுக்கலாம்: கர்நாடக அமைச்சர் தமிழக முதல்வருக்கு கடிதம்

பெங்களூரு:

மேகதாது அணை குறித்து பேசி முடிவெடுக்கலாம், அதற்காக நேரம் ஒதுக்குங்கள் என்று  கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்தியஅரசின் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றும் வகையில் தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று கூடுகிறது.

இந்த நிலையில், மேகதாது  அணை குறித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் எனக்கோரி அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த  கடிதத்தில், மேகதாது   அணை குறித்து தமிழக மக்களும், தமிழக அரசும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அணை கட்டுவதால் மேட்டூரில் இருந்து தண்ணீர் கடலில் வீணாக கலப்பது தடுக்கப்படும். தவறான கருத்துக்களை களைய முதல்வரை நேரில் சந்தித்து பேசி தெளிவுபடுத்த விரும்புகிறோம். மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக அரசு நேரம் ஒதுக்க வேண்டும். தமிழக அரசுடன் பேசி சுமூக தீர்வு காணவே கர்நாடகா விரும்புகிறது என்று கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மேகதாது அணை பிரச்சினையில் பேச்சு வார்த்தை என்பதே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்.  மேகதாது விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

சட்ட ரீதியான விஷயங்களை பரிசீலித்து தான் மேகதாது அணை திட்ட வரைவு அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது  எனறும்,  மேகதாது பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்புகிறோம், இதில் தமிழக அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டாம்  என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Karnataka Minister letter to Tamilnadu CM Edappadi Palanisamy, We can find solutions through speech for Megatatu Dam issues, மேகதாது அணை குறித்து பேசி முடிவெடுக்கலாம்: கர்நாடக அமைச்சர் தமிழக முதல்வருக்கு கடிதம்
-=-