நிரந்தர பொதுச் செயலாளர் என்று ஜெ.வை சும்மா தான் அழைத்தோம்…பொன்னையன் பேட்டி

Must read

சென்னை:
 

அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் பொன்னையன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு இதுவரை யாரும் போட்டியிடவில்லை. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சியின் தேர்வு செய்யப்பட்ட அனைத்து அமைப்புகளும், அணிகளும் விரும்புகின்றன. பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பங்கேற்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் பொதுக்குழு கூடுகிறது . நிரந்தர பொது செயலாளர் என்ற பதவி அதிமுக.வில் இல்லை. பொதுச்செயலாளர் தான். நாங்கள் மறைந்த முதல்வர் பாசத்தின் மிகுதியால் அவ்வாறு அழைத்தோம். பொதுச்செயலாளரை பொதுக்குழுவே தேர்ந்தெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article