டில்லி,

னாதிபதி, பிரதமர் போன்ற விவிஐபிக்ளின் சுற்றுப்பயணத்திற்காக அமர்த்தப்பட்ட தனி விமா னங்களுக்கான செலவு தொகை அரசிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று சிஏஜி விமான நிறுவனத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.

அரசு முறை பயணமாக செல்லும் ஜனாதிபதி, பிரதமர் போன்றோர் தனி விமானங்களை பயன் படுத்தி வருகின்றனர். இதற்கான செலவு பல கோடிகளை தாண்டி சென்றுள்ளது. ஏற்ககனவே ஏர் இந்தியா  விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படும் நிலையில், விவிஐ பிக்களின் விமான  செலவு தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு, மத்திய கணக்கு தணிக்கை துறை (சிஏஜி) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, மத்திய கணக்கு தணிக்கை துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பயணத்திற்காக, ஏர் இந்தியா சார்பில், தனி விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த விமான பயணத்திற்கான பயணத்தொகை இதுவரை விமான நிறுவனத்துக்கு செலுத்தப்பட வில்லை. கடந்த  2016 மார்ச் நிலவரப்படி மத்தியஅரசு,  ஏர் இந்தியா நிறுவனதுக்கு 513 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

இந்த பணத்தை வசூலிக்க ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

சிஏஜி-யின் இந்த அறிக்கைக்கு பதில் தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம்,  விவிஐபிக்களுக்கு பல்வேறு நகரங்களில் இருந்து தனி விமானங்கள் இயக்கப்பட்டதால், அதுபற்றிய விபரங்களை சேகரித்து வருகிறோம் என ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.