ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள கருங்கல்பாளையம் வாக்குச்சாவடியில்   சுமார் 3மணி நேரமாக காத்திருந்த வாக்காளர்கள்  போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதுபோல, ஈரோடு, ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க தாமதம் – வாக்காளர்கள் அவதி பட்டு வருகின்றனர்.  நீண்ட நேரம் நிற்க முடியாததால் தரையில் பெண்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

 ஈரோடு  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடையிடையே, மைக் அழிவாகவும், பணம் பட்டுவாடா நடைபெறுவதாகவும், அதிமுகவினர் புகார் அளித்தும், அதுகுறித்து கண்டுகொள்ளாமல் தேர்தல் ஆணையம் தூங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்குச்சாவடியில் காலையில் இருந்தே அதிக அளவில் வாக்காளர்கள் திரண்டு இருந்தனர். அங்கு ஒரு பூத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதாக கூறப்பட்டது. இதனால், அடுத்த இயந்திரம் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  சுமார் 3 மணி நேரம் வரை வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீண்ட நேரமாக வாக்களிக்க காத்திருந்த சபீயா என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு குடிக்க கூட அங்கு தண்ணீர் இல்லை. இதையடுத்து வாக்களிக்க வந்த வாக்காளர்கள்   20-க்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

சம்பவ இடத்துக்கு ஏ.டி.எஸ்.பி. ஜானகிராமன் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பி வைத்தார்.

வாக்களிக்க தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகாரில் கருங்கல் பாளையம் காமராஜ் பள்ளி சாவடியில் காவல்துறை தேர்தல் பார்வையாளர் சுரேஷ்குமார் நேரில் ஆய்வு நடத்தினார்.

அதுபோல, ஈரோடு, ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க தாமதம் – வாக்காளர்கள் அவதி பட்டு வருகின்றனர்.  நீண்ட நேரம் நிற்க முடியாததால் தரையில் பெண்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்படுவதால், கள்ள ஓட்டுக்கள் போடப்படுவதாகவும் ஒருசிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.