இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விஸ்வரூபம் 2?

 

கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும்படியான காட்சிகள் இருப்பதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து படத்தைத் திரையிடுவதே பெரும் பாடக போனது கமலுக்கு. பிறகு ஒருவழியாக பிரச்சினைகளை தீர்த்து… சில காட்சிகளை நீக்கி.. படத்தை வெளியிட்டார்.

இந்த நிலையில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. அதன் டீசரை சமீபத்தில் வெளியிட்டார் கமல்.

இதில் வரும் ஒரு வசனம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழப்பதிப்பில், “எந்த மதத்தையும் சார்ந்து இருப்பது தப்பு இல்லே பிரதர். ஆனா தேசத்துரோகியா இருக்கிறது தப்பு” என்று கமல் வசனம் பேசும் காட்சி இருக்கிறது.

இதில் பிரச்சினை ஏதும் இல்லை.

ஆனால் இதே இந்திப் பதிப்பில், “தேஹியே…முசல்மான் வோனா குனா நஹியே… லெகின்…ஆப்சே இன்சான் ஹோனா…” என்று இருக்கிறது.

அதாவது, “இதோ பார்..இஸ்லாமியனா இருப்பது முக்கியமில்லை.

ஆனால் இங்கு மனுஷனா இருப்பது முக்கியம்” என்று அர்த்தம்.

இந்த வசனம் தங்களை புண்படுத்தியிருப்பதாக இஸ்லாமியர்கள் பலர், சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஆக, இரண்டாம் பாகத்திலும் பிரச்சினைகளுக்குக் குறைவிருக்காது போலிருக்கிறது.

 

 
English Summary
vishwaroopam 2 to insult Muslims?