விக்ரம் கர்ணனாக நடிக்கும் ‘மகாவீர் கர்ணன்’ பட பூஜை

புராண வரலாற்றுக் கதைகள் பலவற்றில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தாலும் (மகாபாரத) கர்ணன், தனிச்சிறப்பு வாய்ந்த திரைப்படம். இப்போது அந்த மகாபாரத தை மீண்டும் படமாக்கப்பட.. அதில் கர்ணனாக விக்ரம் நடிக்கிறார்.

‘மகாவீர் கர்ணன்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தை,  நியூயார்க்கை சேர்ந்த யுனிடெட் பிலிம் கிங்டம் என்ற நிறுவனம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாய் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

மலையாள இயக்குநரான ஆர்.எஸ்.விமல் திரைக்கதை எழுதி இயக்குகிறார். படத்தின் வசனத்தை பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார்.  துரியோதனனாக சுரேஷ் கோபி நடிக்கிறார்.

‘Game of Thrones’ என்ற ஹாலிவுட் படத்தில் பணியாற்றிய வெளிநாட்டுக் கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.விமல், படத்தின் ஸ்கிரிப்ட் புத்தகத்துடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனின் சமர்ப்பித்து ஆசிகளைப் பெற்றார். பிறகு இன்று காலை கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பட பூஜை நடந்தது.  இதில் நடிகர்கள் சுரேஷ் கோபி, இந்திரன்ஸ்,, மலையாள இயக்குநர் பி.உன்னிகிருஷ்ணன்,  கதாசிரியர் ஜெயமோகன், மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின்போது கர்ணனின் அரண்மனை முகப்பில் வைக்கப்பட வேண்டிய ஆலய மணி பிரதிஷ்டை செய்யப்பட்டு பத்மநாப சுவாமி முன்னிலையில் படக் குழுவினரிடம் அளிக்கப்பட்டது.

இந்த ஆலய மணி ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் அமைக்கப்பட இருக்கும்  கர்ணனின் அரண்மனை செட்டில்,  30 அடி உயர பீடம் அமைக்கப்பட்டு அதன் மீது பொருத்தப்படுமாம்.

இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் ‘மகாவீர் கர்ணன்’ உருவாகிறது. தவிர 32 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

“மிகப்பெரிய பிராஜக்ட் இது. 300 கோடி ரூபாய் செலவில் பாகுபலி படத்தைவிட பிரம்மாண்டமாய் உருவாக இருக்கிறது. வரும் 2020ம் ஆண்டு திரைக்கு வரும்” என்கிறார்கள் படக்குழுவினர்.

#Vikram # Karna #mahabharathamin  #Mahaveer Karna #film

Tags: Vikram plays the role of Karna in 'Mahaveer Karna' film, விக்ரம் கர்ணனாக நடிக்கும் ‘மகாவீர் கர்ணன்’ பட பூஜை