சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து கலக்கிய திரைப்படம் ‘புஷ்பா’ – தி ரைஸ்.

சமந்தாவின் சிங்கிள் சாங் மூலம் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலான இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ‘புஷ்பா’ – தி ரூல் என்ற பெயரில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து முதல் பாகத்தில் வில்லனாக நடித்த பகத் பாசில் புஷ்பா 2 படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், புஷ்பா 2 படத்தில் பகத் பாசில் நடிப்பதாகவும் அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.