விஜய்.. 26-ல் 63: நெகட்டிவ் விமர்சனத்தில் இருந்து மாஸ் ஹீரோ!

ன்று மாஸ் ஹீராவோ விஸ்வரூபம் எடுத்திருக்கும் விஜய், அறிமுக நடிகராக திரைத்துறையில் காலடி எடுத்துவைத்த நாள் இன்று.

இன்றைக்கு 26 வருடங்களுக்கு முன் 1992 டிசம்பர் 4  இதே நாளில்தான் அவர் நடித்த முதல் திரைப்படமான ஆம் தேதிதான்  அவர் நடித்த முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு வெளியானது. இந்தப் படத்தை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். அவரது அம்மா, ஷோபா சந்திரசேகர் தயாரித்திருந்தார். படத்தில் இவரது நாயக கீர்த்தனா. பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். (அதற்கு முன்பு தனது  தந்தை இயக்கிய படங்கள் சிலவற்றில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியிருந்தாலும் நாயகனாக நடித்த முதல் படம் இதுதான்.)

ஆனால் முதல்படமே தோல்விதான்.

இதையடுத்து அவரது தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்,  விஜய்காந்த்தை வைத்து செந்தூரபாண்டி என்ற படத்தை எடுத்தார். அதில் விஜய்யை நடிக்க வைத்தார்.   இந்தத் திரைப்படம் மூலம் விஜய் ஓரளவுக்கு பேசப்படும் நடிகராக உயர்ந்தார்.

ஆனாலும், அதைத்தொடர்ந்து அவர் நடித்த ரசிகன், தேவா, விஷ்ணு, சந்திரலேகா, கோயமுத்தூர் மாப்பிள்ளை படங்களும் சொல்லிக்கொள்ளம் அளவுக்கு வெற்றியைத் தரவில்லை.

தவிர அவரது தோற்றத்தை மிகவும் கிண்டலடித்து நெகட்டிவ் விமர்சனம் செய்தது ஒரு பிரபல வார இதழ். இதனால் விஜய்யும் எஸ்.ஏ.சந்திரசேகரும் மிகவும் மனம்  நொந்தனர். எஸ்.ஏ.சி. அந்த விமர்சனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விஜய் ரசிகர்கள் சிலர், அந்த வார இதழின் அலுவலத்தை முற்றுகையிட்டனர். குறிப்பிட்ட வார இதழின் பிரதியை தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலிலும் விஜய் மனம் தளரவில்லை. திரைத்துறைதான் தனது வாழ்க்கை என்பதில் உறுதியாக இருந்தார்.  மிகவும் சிந்தித்து தனது பாணியை மாற்றினார்.

ஜாலியான – ஆக்சன்  ஹீரோ போன்ற கதாபாத்திரத்திரங்களில் இருந்து விலகி, செண்ட்டிமென்ட் கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்தார்.  பூவே உனக்காக, வசந்த வாசல், காலமெல்லாம் காத்திருப்பேன், காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் இப்படி அடுத்தடுத்து அவர் திட்டமிட்டு தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் அவருக்கு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தின. வெற்றிப்பாதையில் நடைபயில ஆரம்பித்தார் விஜய்.

தன்னை தமிழ்த்திரையுலகின் முக்கிய நடிகராக அடையாளப்படுத்திய விஜய், அடுத்தகட்டத்துக்கு பாய தயாரானார். மின்சார கண்ணா, லவ்டுடே, கண்ணுக்குள் நிலவு, குஷி, பிரியமானவளே போன்றவை அவரை ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக மக்கள் மனதில் நிறுத்தியது. ஆண் ரசிகர்களுடன் பெண் ரசிகர்களும் அவருக்கு ஏராளமாய் உருவானார்கள்.

அடுத்தகட்டமாக ஆக்சன் அதிரடி படங்களைத் தேர்ந்தெடுத்தார்.  பகவதி, தமிழன், திருமலை, சிவாகாசி, திருப்பாச்சி, கில்லி என தொடர்ந்து அதிரடி திரைப்படங்கள்.. அதிரடி வெற்றிகள்.

அதே நேரம், அழகிய தமிழ் மகன், நண்பன், காவலன் போன்ற திரைப்படங்களில் தனது வித்தியாசமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தவும் விஜய் தவறவில்லை.

அடுத்துதான் விஜய் திரை வாழ்க்கையில் மிக முக்கயகட்டம். துப்பாக்கி, கத்தி, மெர்சல் போன்ற சமூக அக்கறையை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் – திரைப்படங்களில் நடித்தார். அனைத்துமே பெரும் வெற்றி பெற்றன. இதோ சர்கார் வரை தனது அதிரடி வெற்றிகளைத் தொடர்கிறார். இதோ அடுத்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63.

மாஸ் ஹீரோ என்பதோடு, தென்னிந்திய நடிகர்களில் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர் என்கிற பெயரையும் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்ல, தனது படங்களில் 30 பாடல்கள் வரை பாடி பாடகர் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இவரது தாயார் ஷோபா சிறந்த பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் திரைப்பயணம் தன்னம்பக்கை – விடா முயற்சி ஆகியவற்றக்கான அடையாளம். பெரிய இயக்குநரின் மகனாக இருந்தாலும், திடீரென வெற்றியை அவர் ருசித்துவிடவில்லை. முதல் சில படங்கள் தோல்விதான். ஆனால் அதற்காக அவர் துவண்டுவிடவில்லை. திட்டமிட்டார்.. வெற்றிக்காக தன்னைத் தயார் படுத்திக்கொண்டார். மெல்ல மெல்ல வளர்ந்து இன்று உச்சத்தில் இருக்கிறார்.

அவரது திரைவாழ்க்கையில் இருந்து  கற்க வேண்டிய பாடம் இதுதான்.

#vijiy #  December5th1992 #firstfilm #naalayatherppu #26years

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Vijay 26: mass hero from negative review, விஜய்.. 26-ல் 63: நெகட்டிவ் விமர்சனத்தில் இருந்து மாஸ் ஹீரோ!
-=-