முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தேறி வருகிறார் : மருத்துவமனை அறிக்கை.

டில்லி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தேறி வருவதாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த 11ஆம் தேதி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.    அப்போது அவர் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவரை மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.   தற்போது அவர் உடல் நிலை குறித்த அறிக்கை ஒன்றை மருத்துவமனை பத்திரிகைகளுக்கு அளித்துள்ளது.

 

அதில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 11 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்கு சிறுநீர் பாதையில் தொற்று, நெஞ்சு அடைப்பு மற்றும் குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மெதுவான சிறுநீரக சுத்தீகரிப்பு (SLOW DIALYSIS) சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டது.   சிகிச்சைக்குப் பிறகு வாஜ்பாய் உடநிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது.    அவரது சிறுநீரக செயல்பாடுகள் மேம்பட்டுள்ளது.  சிறுநீர் வெளியேறுவதும் அதிகரித்துள்ளது.

அவர் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு,  மூச்சு விடுதல் ஆகியவை சீராக உள்ளன.  அவர் விரைவில் முழுவதும் குணமடைவார் என எதிர்பார்க்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Vajpayee health condition is improving : AIIMS
-=-