அமெரிக்காவில் 1000 சிறுவர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள்: அதிர்ச்சி தகவல்கள்

பென்சில்வேனியா:

மெரிக்காவில் 1000க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை கத்லோலிக்க பாதிரியார்கள்  பாலியல் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கத்தோலிக்க பாதிரியார்கள் பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.  சமீபத்தில் சிலி நாட்டிலும், கத்தோலிக்க பாதிரியார்கள்மீதும், பிஷப்கள் மீது பாலியல் குற்றச் சாட்டு எழுந்தது. இதன் காரணமாக சிலியில் உள்ள 34 பிஷபுகள் ராஜினாமா செய்திருந்தனர்.

கடந்த மாதம் கேரளாவிலும், பாவ மன்னிப்பு கேட்க சென்ற இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக 4 பாதிரியார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகானத்தில் 1000க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள்  ரோமன் கத்தோலிக்க பாதிரியார்களால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்ட, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த மாகாண தலைமை நீதிபதிகள் குழு மற்றும் அட்டார்னி ஜெனரல் ஷபிரோ  சுமார் 900  பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை அமெரிக்காவில் மட்டுமல்லாது வாடிகனிலும் புயலை கிளப்பி உள்ளது.

அந்த அறிக்கையில், 1940ம் ஆண்டு முதல் சுமார் 300 ரோமன் கத்தோலிக்க பாதிரியார்களால் 1000-க்கும் மேலான சிறுவர் சிறுமிகள் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இழி செயலில் மூத்த கத்தோலிக்க பாதிரியார்கள் முதல் தற்போதைய ஆர்ச் பிஷப் வரை ஈடுபட்டி ருந்ததாக கூறி அதிர்வலைகளை  ஏற்படுத்தி உள்ளது.

மேலும், டான்சில்ஸ் அறுவை சிகிச்சை முடிந்த 7 வயது சிறுமி பார்ர்க்க சென்ற பாதிரியார் ஒருவர் அந்த சிறுமிக்கு ஆறுதல் கூறாமல், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மற்றொரு பாதிரியார், 9 வயதுச் சிறுவனிடம் மோசமான நிலையில் நடந்துவிட்டு, பின்னர் புனித நீரால் சிறுவனின் வாயைக் கழுவியதாகவும், மேலும் பல பாதிரியார்கள் இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான  அறிக்கையை வெளியிட்டு பேசிய  தலைமை ஜூரி, “இது போன்ற குற்றங்களைத் தடுக்க நிறுவன ரீதியான சீர்த்திருத்தங்கள் இருந்தும், சர்ச்சின் தனிப்பட்ட தலைவர்கள் பொது மக்களுக்கான பொறுப்பிலிருந்து தவறி உள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதுபோன்ற தவறுகளை இழைத்த பாதிரியார்களுக்கு, கத்தோலிக்க நிர்வாகம் பதவி உயர்வு கொடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய ஜூரி, கத்தோலிக்க சர்ச் பாலியல் சுரண்டல்கள் எனும் புத்தகத்தை அவ்வளவு எளிதில் மூடிவிட முடியாது என்றும் கூறினார்.

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அட்டர்னி ஜெனரல் ஜோஷ் ஷபிரோ, சிறுவர் சிறுமி களுடன் பாலியல் ரீதியான தவறிழைத்த 100க்கும் மேற்பட்ட  பாதிரியார்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், பலர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டதாகவும், ஒருசிலர் மட்டுமே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்  என்றும் கூறினார்.

மேலும், இந்த பாலியல் முறைகேடுகள் குறித்து,  விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்ப தாகவும், சுமார் 1.7 மில்லியன் கத்தோலிக்கர்களை பிரதிநிதித்துவம் செய்யும் 8 பாதிரியார்களில் 6 பேர் மீது கடுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இந்த அறிக்கை கடந்த செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  ரோமன் கத்தோலிக்க டயோசீஸ் தலைவர்கள் பாலியல் பலாத்காரத்துக்காக பாதிக்கப்பட்டவர்களிட்ம் மன்னிப்புக் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கத்தோலிக்க பாதிரியார்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  சிறுவர் சிறுமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது விவகாரம்  அமெரிக்காவில் மட்டுமல்லாது உலக நாடுகள் முதல்  வாடிகனிலும்  பெரிய புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: US priests who have raped over 1000 children .. The shocking report, அமெரிக்காவில் 1000 சிறுவர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை: அரியானா மாநில அரசு முடிவு
-=-