வாஷிங்டன்,

மெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள டிரம்ப் அரசு, தகுதி அடிப்படையில் மட்டுமே குடியுரிமை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளது. இதன் காரணமகா இந்திய தொழிலாளர்கள் பயன் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர் அந்நாட்டின் கிரின் கார்டு பெற்று, அங்கேயே நிரந்தரமாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் டிரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, வெளிநாட்டினர் அமெரிக்காவில் வசிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதற்காக குடியேற்ற உரிமை சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  மேலும் ஒருசில இஸ்லாமிய நாட்டினர் அமெரிக்கா வரவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் தங்கி பல லட்சகணக்கான இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து அங்கேயே வசிக்க விரும்பி, கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை கேட்டு விண்ணப்பித்து உள்ளார்கள். இந்த கார்டை பெற பல ஆண்டுகள் காத்திருந்தும் வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், தகுதியின் அடிப்படையில் குடியேற்ற உரிமை வழங்க இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் டிரம்ப்,

குடியேற்ற நடைமுறைகளில் உள்ள கடுமையான விதிமுறைகளை தளர்த்துவது குறித்து பேசினார். அப்போது, திறமை வாய்ந்தவர்கள், நமது சமுதாயத்திற்கு பங்களிப்பை செய்யக்கூடியவர்கள், அவர்கள்  நமது நாட்டை மதித்து, நேசித்து நமக்காக பணியாற்றி வருகிறார்கள். அவர்களை நாம்  அனுமதி அளிக்க வேண்டும் என்ற அவர், அது தொடர்பாக குடியேற்ற சீர்திருத்தங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்றார்.

மேலும், இந்த புதிய சட்டத்திற்கு குடியரசு, ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றும்  கேட்டுக்கொண்டார்.

டிரம்பின் இந்த பேச்சு காரணமாக திறமையான  இந்தியர்கள் பலருக்கு மீண்டும்  கிரின் கார்டு பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.