சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் 17.88% அளவிலேயே வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழகத்தில் சென்னை உள்பட  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு சென்னை உள்பட சில பகுதிகளில் மந்தமாகவும், பேரூராட்சி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரை காலை 11 மணி நிலவரப்படி 17.88% வாக்குகள் பதிவாகி உள்ளன. காலை 9 மணி நிலவரப்படி 3.96% வாக்குகளே சென்னையில் பதிவான நிலையில் 11 மணி நிலவரப்படி 17.88% வாக்குகள் பதிவாகிவிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் வாக்கு பதிவு குறைவாக இருப்பதையடுத்து, சென்னை மாநகராட்சி, சென்னை மக்களை வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சராசரியாக மாநகராட்சிகளில் 17.93 சதவிகிதமும், நகராட்சிகளில் 24.53 சதவிகிதமும், பேரூராட்சிகளில் 28.42 சதவிகிதமும், வாக்குகள் பதிவாகின.

மாநகராட்சிகளில் அதிக அளவாக திருச்சி மாநகராட்சியில் 26.64%, குறைந்த அளவாக தாம்பரத்தில் 6.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டத்தில் அதிகளவாக அரியலூரில் 30.79%, குறைந்த அளவாக செங்கல்பட்டில் 10.65% வாக்குகள் பதிவாகியுள்ளன.