லக்னோ,
உத்தரபிரதேசத்தில் மோசமான நிலையில் இருக்கும் 60 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகளை இரண்டே மாதங்களில் மேம்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.

அம்மாநிலத்தின் முக்கியமான சாலைகள் தவிர்த்து பெரும்பாலான சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மேடு பள்ளங்களாக அமைந்துள்ளன. இதனால்  வர்த்தகம், சுற்றுலாத்துறை  பாதிப்படைந்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் ஜூன் 15 க்குள் 60  ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தரபிரதேச பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் சதகாந்த், இத்திட்டத்திற்கு முதலமைச்சரால்   ரூ.3 ஆயிரம் கோடி நிதி   ஒதுக்கப்பட்டு, அதில் ரூ 942 கோடி உடனடியாக  வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சாலை மேம்படுத்தப்படும் பணிக ள்  அனைத்தும்  கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் மக்கள் பிரதிநிதி  ஒருவர் பணிகளை பார்வையிடுவார்  என்றும்  அவர் கூறினார்.