டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாளை பிற்பகல் 1 மணிக்கு  கூட்டம் நடைபெற உள்ளது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது ஆகஸ்ட் 13-ந்தேதி  கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், இந்த கூட்டத்தொடர் முழுவதும் பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை உயர்வு போன்றவைகளை காரணம், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் இரு அவைகளையும் முடக்கி உள்ளன. இதனால் மக்கள் நலன் தொடர்பான எந்தவொரு மசோதா மற்றும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் பெறுவதில்  தாமதம் ஏற்பட்டு உள்ளது. மேலும், பாராளுமன்றம் முடக்கப்பட்டு உள்ளதால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் கடுமையான நிதிச்சிக்கல் நிலவி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் பொறுப்பற்ற போக்கால் மேலும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.