சென்னை:  தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகஎ அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல பால் கூட்டுறவு சங்கத்தினர், அரசு குறைவான விலைக்கு பால் கொள்முதல் செய்வதால், பாலை தனியாருக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, அமைச்சர் நாசர் கூட்டுறவு சங்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, நேற்று (16ந்தேதி)  பால்விலை தொடர்பாக, பால் வளத்துறை அமைச்சருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு தரப்புக்கும் இடையே  உடன்பாடு ஏற்படாத நிலையில், திட்டமிட்டப்படி இன்றுமுதல் (வெள்ளிக்கிழமை)  போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் நாசர்,  தமிழ்நாட்டில் உள்ள மொத்தமுள்ள 9,354 பால் கூட்டுறவு  சங்கங்களில் ஒரே ஒரு சங்கம் மட்டுமே போராட்டத்தை அறிவித்துள்ளது.  இதன்ல், தமிழ்நாட்டில் ஒரு இடத்தை தவிர வேறு எங்கும் பால் நிறுத்தம் இல்லை. தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெற்றுள்ளது. எந்த சூழலையும் சந்திப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது எனவும் கூறினார்.