டில்லி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறும் துர்கா பூஜை உலக பாரம்பரிய நிகழ்வுகளில் இடம் பெற்றுள்ளது.

ஆண்டு தோறும் நாடெங்கும் நவராத்திரி பண்டிகை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  மேற்கு வங்க மாநிலத்தில் குறிப்பாகத் தலைநகர் கொல்கத்தாவில் இந்த பண்டிகை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மகிடாசுரன் என்னும் அரக்கனைத் துர்க்கை அம்மன் அழித்ததால் இது துர்கா பூஜை என அழைக்கப்படுகிறது.   மேற்கு வங்கத்தில் துர்கை அம்மனின் பிரம்மாண்டமான சிலைகள் அமைத்து பிரதிஷ்டை செய்து நவராத்திரி 9 நாட்களும் சிறப்புப் பூஜை நடைபெறும்.

இந்த சிலைகள் 10 ஆம் நாள் முடிவில் ஆற்றில் கரைக்கப்படும்.  யுனெஸ்கோ இந்த துர்கா பூஜையை உலகப் பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் சேர்த்துள்ளது.  இது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.