டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்: பந்தாடப்படும் ஒபாமா ஆதரவு தூதர்கள்

Must read

வாஷிங்டன்:

ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பார்கள். அது எல்லா நாட்டுக்கும் பொறுந்தும் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைந்தவுடன், முந்தைய ஆட்சியில் இருந்த அதிகாரிகள் பந்தாடப்படுவதும், இவர்களுக்கு ஆதரவான அதிகாரிகளை முக்கிய பதவிகளில் அமரவைப்பதும் ஏதோ நம்ம நாட்டிற்கு மட்டும் பொருந்து என்பது கிடையாது. குறிப்பாக அது தமிழகத்தில் மட்டும் கிடையாது என்பதை அமெரிக்கா நிரூபித்துள்ளது.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனவரி 20ம் தேதி அவர் பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து ஒபாமா வெளியேறும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் அரசியல் ரீதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள அமெரிக்க தூதர்களை அவரவர் பதவியில் இருந்து ஜனவரி 20ம் தேதிக்குள் எவ்வித நிபந்தனையும் இன்றி வெளியேறுமாறு டிரம்ப் ஆதரவு அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை நியூசிலாந்துக்கான அமெரிக்க தூதர் மார்க் கில்பர்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார். டிசம்பர் 23ம் தேதியிட்ட ஒரு அரசு அறிவிப்பில் இது வெளியானதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சில தூதர்களுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ள தூதர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு டிரம்ப் தரப்பில் இருந்து உடனடியாக யாரும் பதில் கூறவில்லை.

இந்த உத்தரவு செனட் அனுமதி இல்லாமல் ஜெர்மனி, கனடா, பிரிட்டன் போன்று சர்ச்சைக்குறிய நாடுகளில் பணியாற்றுவோருக்கு பொருந்தும் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், இது வழக்கமான நடைமுறை தான். பதவி காலம் முடிந்தவர்கள் தான் வெளியேறுகிறார்கள். ஆயிரகணக்கான அரசியல் பிரமுகர்கள் வெள்ளை மாளிகையிலும், சில முகமைகளிலும் பணியாற்றுகிறார்கள் என்று டிரம்ப் சார்பு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கொள்கைகள் மற்றும் உள்நாட்டு கொள்கைகளில் கையெழுத்திடும் அதிகாரம் படைத்த அதிகாரிகளை மாற்றுவதில் தான் டிரம்ப் குறியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

More articles

Latest article