தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் மீட்பு பணியில் பங்குகொண்ட இந்தியர்கள்

மும்பை:

தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் மீட்பு பணியில், இந்தியாவை சேர்ந்த கிர்லோஸ்கர் கம்பெனி ஈடுபட்டது அனைவரும் அறிந்ததே. அந்த நிறுவனத்தை 2 பேர்  சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

அவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவர்கள் பணியாற்றி வரும் இந்திய நிறுவனமான கிர்லோஸ்கர் நிறுவனத்தின் மதிப்பும், உலக அளவில்  உயர்ந்து உள்ளது.

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தாய்லாந்து குகையில் சிக்கிய 12 இளம் கால்பந்து விளையாட்டு வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த மீட்பு பணியில் இந்தியாவை சேர்ந்த  மோட்டார் பம்புசெட்டுகள், கம்ப்ரசர்களை தயாரித்து  விற்பனை செய்து வரும் பிரபல நிறுவனமான  கிர்லோஸ்கர் நிறுவனமும் பங்குகொண்டது. இந்த நிறுவனத்தின் 7 பேர் வல்லுநர் குழு சென்ற நிலையில், அவர்களில் 2 பேர் மட்டுமே மீட்பு பணிகளில் ஈடுபட்டனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

கிர்லோஸ்கர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பொறியியல் வல்லுநர்களான பிரசாத் குல்கர்னி, ஷியாம் சுக்லா ஆகியோர் இந்த மீட்பு பணியில் பங்குபெற்ற 2 இந்தியர்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இவர்களில் பிரசாத் குல்கர்னி என்பவர்  மகாராஷ்டிராவில் சாங்க்லி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், மற்றோருவர், புனேவை சேர்ந்த பொறியாளரான ஷியாம் சுக்லா இவர்கள் இருவரும்  சிறுவர்கள் அடைப்பட்டு கிடந்த குகையில் இருந்து தண்ணீரை வெளி யேற்றும் பணியில் திறமையாக செயல்பட்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மீட்பு பணியில் ஈடுபட்டது குறித்து குல்கர்ணி கூறியதாவது, குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க உடனே  குகையிலிருந்து நீரை அகற்ற வேண்டும் என்பதே எங்களது முதல் நோக்கமாக இருந்தது.. நாங்கள் தண்ணீரை வெளியேற்ற பல வழிகளில் முயற்சி செய்தோம். ஆனால், குகையில் தண்ணீர் மட்டம் குறைய மறுத்தது.  அதே வேளையில் மழையும் பெய்து வந்ததால், இது பெரும் பிரச்சினை யாக உருவெடுத்தது. எனவே, சிறிய வகை பம்புகள் மூலம், ஜெனரேட்டர் உதவியுடன் தண்ணீர் மற்றும் சகதியை வெளியேற்றினோம் என்றார்.

இவர் கிர்லோஸ்கர் நிறுவனத்தில் பம்புகள் வடிவமைப்புத் தலைவராக இருந்து வருகிறார்.

மீட்பு பணியில் ஈடுபட்ட சுக்லா கூறும்போது, குகை மிகவும் குறுகலாக இருந்ததால், தண்ணீரை வெளியேற்ற மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது. குழாய்களை வரிசையாக அடுக்கி தண்ணீரை வெளியேற்றினோம் என்றும் கூறி உள்ளார். இவர்  கிர்லோஸ்கர் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் வளர்ச்சி துறை பொது மேலாளராக இருந்து வருகிறார்.

இவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
English Summary
two Maharashtrians who were part of an almost impossible Thai cave rescue, Prasad Kulkarni from Sangli district in Maharashtra and engineer Shyam Shukla from Pune were among the dozens who erupted in cheers near the flooded cave system in northern Thailand