சென்னை: டிவிஎஸ் குழு தலைவரின் தாயார் பிரேமா சீனிவாசன் மறைவையொட்டி, அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பிரபல தொழிலதிபரும், டிவிஎஸ் குழும தலைவருமான வேணு  சீனிவாசனின் தாயார் பிரேமா ஸ்ரீனிவாசன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் சென்னை அடையாறு  கிளப் கேட் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மறைந்த பிரேமா சீனிவாசன் உடலுக்கு மலர்  மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.  அத்துடன் டிவிஎஸ் குடும்பத்திற்கு மு.க. ஸ்டாலின் தனது ஆறுதலை தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது, முதலமைச்சருடன்,  அமைச்சர்கள் கே.என். நேரு  மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் த.வேலு  உள்பட சிலர் சென்றனர்.

மறைந்த  பிரேமா சீனிவாசன் கலை, இசை போன்றவற்றுடன் பயணித்ததுடன் , பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஆடைகள், நகைகள் ,வெள்ளி பொருட்கள் வடிவமைப்பாளராகவும் திகழ்ந்தார். வாழ்வில் தத்துவம் , இசைக்கற்றல் , கலை , தோட்டங்கள் அமைத்தல்,  சைவ உணவு வகைகள் தயாரிப்பு போன்றவற்றில் ஆர்வம் காட்டி வந்தார் அத்துடன் . சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் மெட்ராஸ் சுற்றுச்சூழல் சங்கத்தை தொடங்கி சேலம் மற்றும் ஈரோடு பகுதியில் தொழிற்சாலைகளால் ஆறுகள் மாசுபடுவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தியுள்ளார்.