டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலையும், ஜனாதிபதி பதவியை இழிவுபடுத்திய ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தியை தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்களும், காந்தியவாதிகளும் கொந்தளித்து வருகின்றனர்.

இந்தியாவின் முதல்குடிமகன் குடியரசு தலைவர். அவரே இந்திய அரசின் தலைவர் ஆவார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். . இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஆவார், தற்போதைய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆவார்.

தற்போது இந்தியாவின் 16வது குடியரசு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஜனாதிபதி பதவி காலியாக இருப்பதாக, வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு, நாட்டின் முதல் குடிமகனை அவமதிக்கும் நோக்கில் அறிவிப்பு வெளிட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் 16வது குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்றதும், முதல் குடியரசு தலைவராக டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் இருந்தார். தற்போது, 15வது குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவருக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றுமுதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து துக்ளக் வார இதழ், இந்தியாவில் ஜனாதிபதி பதவி காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு, குடியரசு தலைவரின் மாண்பையும், பதவியையும் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி உள்ளது.

இதுதொடர்பாக துக்ளக் வார இதழில், வேலை காலி என்ற தலைப்பில், பதவியின் பெயர் இந்திய ஜனாதிபதி என்றும், வயது 80க்கு மேல் இருப் பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் மற்றும் ஏராளமான சலுகைகள், இலவச விமான பயணம், ஐந்தாண்டு முழு ஓய்வுக்கு இடையே எப்போதாவது சில ஃபைல்களில் கையெழுத்து போட வேண்டும், ஆண்டு ஒருமறை குடியரசு தினத்தன்று நாட்டு மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் உரை நிகழ்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதுடன்,

குடியரசு தலைவர் பதவிக்கு, பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதியினர் மட்டுமே தகுதி என்றும்,.  முற்பட்ட வகுப்பினர் விண்ணப்பிக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

துக்ளக் வார இதழின் இந்த அடாவடி நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் முதல் குடிமகன் பதவியை இழிவு படுத்தும் வகையில், சாதாரண வேலைவாய்ப்பு செய்திபோல பதிவிட்டு, இழிவுபடுத்தியும், சாதியை கொச்சைபடுத்தும் வகையிலும் செய்தி போடப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள், தேசியவாதிகள், சுதந்திரபோராட்ட வீரர்கள் என பலர் தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

துக்கள் வார இதழை தடை செய்ய வேண்டும் என்றும், துக்ளக் ஆசிரியரான குரூர முகம் கொண்ட குருமூர்த்தியை தேச விரோத சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் குருமூர்த்தியின் நடவடிக்கையையும், துக்ளக் வார இதழையும்,  நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்ற னர். துக்ளக் குருமூர்த்தியின் எதேச்சதிகாரபோக்குக்கு, தமிழ்நாடு பாஜகவும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் என்ன பதில் கூறப் போகிறார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மத்தியஅரசுக்கு எதிராக போராடும் சாதாரன மக்களை தேசவிரோத சக்திகளாக சித்தரிக்கும் மத்திய பாஜக அரசு, இந்தியாவின் முதல் குடிமகனை தேர்ந்தெடுக்கும், நாட்டின் முதல்குடிமகன் பதவிக்கான தேர்தலை கொச்சைபடுத்திய குருமூர்த்திமீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.