நியூ கலிடோனியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

நியூ கலிடோனியா:

நியூ கலிடோனியாவின் பசிபிக் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. நியூ கலடோனியா தீவில் இருந்து சுமார் 155 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள குட்டி குட்டி தீவுகளிலும் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: New Caledonia, Tsunami warning, நியூ கலிடோனியாவில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!