நியுகலிடோனியா தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

தெற்கு பசிபிக்கில் பகுதியில் உள்ள நாடான  நியு கலிடோனியாவில் கடலுக்கு அடியில்  7.5 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா தீவின் கடலுக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் பயங்கர சேதத்தை ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

இன்று காலை  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக நியூ கலிடோனியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில், பூகம்பம் ஏற்பட்டதாகவும், லாயிட்டி தீவுகளுக்கு கிழக்கே தென்கிழக்காக சுமார் 10 கிமீ ஆழமும், 155 கி.மீ. நிலநடுக்கம்  மையம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக  சுமார் 1000 கி.மீ.க்குள்ளான பகுதிகளில் கடும் சுனாமிப் பேரலைகள் தாக்க வாய்ப்பிருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.  நியு காலிடோனியா, வனுவாத்து பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து லாயல்டி தீவுகள் மற்றும் நியு காலிடோனியாவில் கடலோரத்தில் இருக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பு இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யுடிசி நேரம் மாலை 4.42 முதல் 5.39 மணிக்குள் முதல் சுனாமிப் பேரலை தாக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சுனாமி அலைகள் 5 நிமிடத்திலிருந்து 1 மணிநேரத்துக்குள் கடற்கரையைத் தாக்கும் என்றும்  அப்போது,  அலைகள் சுமார் 1 மீ முதல் 3 மீ உயரம் வரை எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Tsunami warning as magnitude 7.5 quake strikes off New Caledonia, நியு கலிடோனியா தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
-=-