சிங்கப்பூரில் ட்ரம்ப் ஏமாற்றப்பட்டுள்ளார் : அமெரிக்க பத்திரிகையாளர்

வாஷிங்டன்

சிங்கப்பூரில் நடந்த வடகொரியா – அமெரிக்கா சந்திப்பில் ட்ரம்ப் ஏமாற்றப்பட்டுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் நிக்கோலஸ் கிரிஸ்டஃப் தெரிவிக்கிறார்.

சிங்கப்பூரில் நடந்த வடகொரியா – அமெரிக்கா சந்திப்பையும் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தையும் பல நாடுகளும் ஐ நா சபையும் பாராட்டி உள்ளது.    எந்த ஒரு வினைக்கும் ஒரு எதிர்க் கருத்து இருக்கும் என்பது போல இதற்கும் ஒரு எதிர்க் கருத்தை தி நியூயார்க் டைம்ஸ் இதழில் பத்திரிகையாளர் நிக்கோலஸ் கிறிஸ்டஃப் வெளியுட்டுள்ளார்.

அவர், “வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது அணு ஆயுத பலத்தினால் அமெரிக்காவுக்கு தனது நாடு சமம் என அமெரிக்க அதிபரை நம்ப வைத்துள்ளார்.   அதன் மூலம் தென் கொரியாவுடனான பத்து வருடப் போருக்கும் ஒரு முடிவு கண்டுள்ளார்.    ஆனால் கடந்த 1992 முதல் வட கொரியா சொல்லி வருவதைப் போலவே இந்த ஒப்பந்தத்திலும் அணு ஆயுதம் முழுமையாக ஒழிக்கப்படும் என்பதை தீர்மானமாக சொல்லவில்லை.

நிக்கொலஸ் கிறிஸ்டஃப்

அவர்கள் அணுஆயுதம் உபயோகிப்பதை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளனர் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.    அவர் அவ்வாறு நம்புவது அவருடைய எண்ணம் மட்டுமே.    ஆனால் நேற்று கையெழுத்தான ஒப்பந்தத்தில் வட கொரியா தன்னிடம் உள்ள அபாயகரமான ஏவுகணைகளை அழிப்போம் என்றோ அணு ஆயுத மூலப் பொருட்களான யுரேனியம் மற்றும் புளுட்டானியத்தை என்ன செய்யப் போகிறோம் என்றோ தெளிவு படுத்தவில்லை.

ட்ரம்ப் தற்போது கொரியப் பகுதிகளில் உள்ள அமெரிக்க படையினர் திரும்பப் பெறப்படுவார்கள் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.   இது புதிய நடவடிக்கை இல்லை.  இதற்கு முன்பு 1989 ஆம் வருடம் இதே போல உறுதி அளிக்கப்பட்டு படையினர் விலக்கப் பட்ட பின்னர் வட கொரியா என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும்.” என கூறி உள்ளார்.

மேலும் பல உதாரணங்களைக் காட்டி சிங்கப்பூரில் ட்ரம்ப் ஏமாற்றப்பட்டு விட்டார் என தனது செய்திக் கட்டுரையில் நிக்கோலஸ் கிறிஸ்டஃப் தெரிவித்துள்ளார்.
English Summary
Trump was outfoxed in Singapore : an american columnist