வாஷிங்டன்: டிரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது மற்றும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தது,  ‘ஜனநாயகத்தின் கருப்பு நாள்’  என புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில்  தோல்வி அடைந்த குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப், வன்முறையை தூண்டு வகையில்ன வீடியோக்களை சமுக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இது வைரலான நிலையில், அவரது அதரவாளர்கள் இன்று நாடாளுமன்றத்தை முறையிட்டு, நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரம் செய்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  துணை அதிரபர் மைக் டென்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் ஒபாமா, இது தேசத்திற்கே அவமானம் என்று தெரிவித்து உள்ளார்.

டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தது ஜனநாயகத்தின் கருப்பு தினம் என அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள  ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பைடன் தொலைக்காட்சியின் பேசியதாவது,  நாடாளுமன்ற முற்றுகையை நிறுத்தக் கோரி   தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் பேச வேண்டும் என வலியுறுத்தியதுடன,  இதுபோன்ற செயல்களால் தாம் மிகவும் வருதப்படுவதாகவும்,  இத்தனை காலமாக நமது நாட்டில், கலங்கரை விளக்கமாக,  நம்பிக்கையுடன் இருந்த ஜனநாயகம் தற்போது இருண்ட தருணத்திற்கு வந்து விட்டது. இன்றைய நாள் ஒரு கறுப்பு நாள் என்றும் கூறினார்.