மதம் மாறிய பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு உண்டு : மத்திய அமைச்சர்

டில்லி

தம் மாறிய பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு நிறுத்தப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர்கள் பலர் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டு முறையை ஒழிக்க வேண்டும் எனவும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து  பேசி வருகின்றனர்.  இதற்கு எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சர் ஜுவல் ஓரம் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், “சில தினங்களுக்கு முன்பு பாஜகவின் பழங்குடி பிரிவினரின் கூட்டம் ஒன்று டில்லியில் நடந்தது.   அந்தக் கூட்டத்தில் மதம் மாறிய பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என வலியிறுத்தப்பட்டது.

ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.   மதம் மாறிய பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு உள்ளிட அனத்து சலுகைகளும் தொடரும்.   ஏற்கனவே அளிக்கப் பட்டுள்ள சலுகைகளில் எதுவும் நிறுத்தப் பட மாட்டாது” என அறிவித்துள்ளார்.

Tags: Tribals who converted into other religions will get quota and other benefits : Central minister