கனடா:

காயலான் கடைக்குப் போட்ட பழைய தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்த 65 லட்சம் ரூபாயை எடுத்து உரிமையாளரிடம் கொடுத்த ஊழியருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

கனடாவில் 68 வயதான ஒருவர், 30 ஆண்டுகளுக்கு முன் தன்னிடமிருந்த டிவியை நண்பருக்கு கொடுத்துள்ளார். அதை வாங்கி பல ஆண்டுகளாக பயன்படுத்திவந்த நண்பர், சில தினங்களுக்குமுன் பழைய பொருள்வாங்கும் கடையில் விற்றுள்ளார். டிவியை மறுசுழற்சிக்கு உட்படுத்திபோது  அதனுள் ஒரு லட்சம் டாலரும் (இந்திய மதிப்பில் சுமார் 65 லட்சம் ரூபாய்), சில ஆவணங்களும் இருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்ட கடை ஊழியர், அதை எடுத்து முதலாளியிடம் கொடுத்துள்ளார்.  அவர் ஆவணத்தில் உள்ள முகவரியை கண்டுபிடித்து பணத்தை கொடுத்துவிடும்படி பணித்துள்ளார். அவர் அந்த பணத்தை டி வி உரிமையாளரிடம் கொடுத்தபோது, அதிர்ச்சியில் அவருக்கு பேச்சேவரவில்லை.

பின்னர் அவர், டிவிக்குள் ஒரு லட்சம் டாலர் மறைத்து வைத்திருந்தது தெரியாமல் 30 ஆண்டுகளுக்குமுன் நண்பருக்கு அன்பளிப்பாக கொடுத்ததாக கூறினார். பணத்துடன் ஆவணங்கள் இருந்ததால் பணம் திரும்ப கிடைத்துள்ளதாக அவர் கூறினார். பணத்தை முதன்முதலில் பார்த்து அதை திரும்ப கொடுத்த கடை ஊழியரை வெகுவாக பாராட்டினார். இதை கேள்விப்பட்ட கனடா நாட்டு மக்களும் பாராட்டுகளை கடை ஊழியருக்குத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.