டெல்லி: மூன்றாம் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்த தானம் செய்யத் தடை விதித்துள்ளது குறித்து மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பொதுவாக மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். இதனால் ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் ரத்த தானம் செய்ய முடியும்.  பொதுவாக  ரத்த தானத்தின்போது 350 மில்லியை மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற முடியும்.

இந்த நிலையில், கொடையாளி அளிக்கும் ரத்தத்தை சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று மூன்றாகப் பிரிக்கிறோம். இவற்றைத் தனித்தனி யாகப் பெறும் நோயாளிகள் மூவர், காப்பாற்றப்படுகின்றனர். இந்நிலையில் ரத்த தானம் பெறுவதில் பாரபட்சம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு கவனம் பெற்றுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், பெண் பாலியல் தொழிலாளர்கள் போன்றவர்கள் இரத்த தானம் செய்ய தடை விதித்துள்ள நிலையில், இரத்த தானம் செய்பவர்களின் வழிகாட்டுதல்களை எதிர்த்து ஒரு மனுவில் முதற்கட்ட வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்த தானம் செய்ய தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள மனுவின் மீது, தற்போது மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

மூன்றாம் பாலினத்தவர், பெண் பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஆண் உறவாளர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது என்பதற்கு உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. நம் நாட்டின் ரத்த தான திட்டம் என்பது சில வரையறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அது ரத்த தானம் பெறுபவரின் முழு நம்பிக்கையை யும் பெற்றதாக இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக,  மத்தியஅரசு குழுவை அமைத்து ஆய்வு நடத்தியது.  தேசிய இரத்த மாற்று கவுன்சிலால் (NBTC, மருத்துவ மற்றும் அறிவியல் நிபுணர்களை உள்ளடக்கிய அமைப்பு) பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. வாசலில், மனுவில் எழுப்பப்பட்டுள்ள சிக்கல்கள் நிர்வாகத்தின் வரம்பிற்குள் அடங்கும் மற்றும் தனிப்பட்ட உரிமைகள் கண்ணோட்டத்தில் இல்லாமல் பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று பிரமாணப் பத்திரம் வாதிடுகிறது.

ரத்த தானம் உயிர் காக்கும் சிகிச்சை. இதில் நாம் எவ்வித சமரசங்களும் செய்ய முடியாது. தன்பாலின உறவாளர்கள் குறிப்பாக ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ரத்தத்தில் ஹெபாடிடிஸ் சி கிருமி இருக்க வாய்ப்பு அதிகம். அதேபோல் பாலியல் தொழிலாளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஹெச்ஐவி தொற்றுக்கு ஆளாகவும் வாய்ப்பு அதிகம். அவர்களை ரத்த தானம் செய்ய அனுமதித்தால் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், ரத்தம் கொடையாக வழங்குபவருக்கும் அது சரியான விதத்தில் பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.