celsia
ப்ராட்லீ எட்வர்ட் மேன்னிங் அமெரிக்க ராணுவ வீரணுக்கான சீருடையுடன் கம்பீரமாக வலம் வந்த இளைஞன்.
அவன் ஒரு திருநங்கையாக மாறி அமெரிக்க ஏகாதிபத்யத்தின் நிம்மதியைக் கெடுப்பான் என்று அவனுடன் பணியாற்றிய யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியபோது ராணுவ ரகசியங்களை விக்கிலிக்சுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.
29 வயதான மேன்னிங் வெளிப்பார்வைக்கு சராசரி ஆணாக இருந்தாலும் உள்ளூர ஒரு பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். ராணுவத்தில் சேர்ந்த பின்னர் ஹார்மோன் சிகிச்சை செய்துகொண்டு முழுப்பெண்ணாக மாறிவிட வேண்டும் என்ற விருப்பம் இன்னும் அதிகமாக தலைதூக்கியிருக்கிறது. தனது பெயரை செல்சியா எலிசபெத் மேன்னிங் என்று மாற்றிக்கொண்டார்.
இவரது நடை உடை பாவனைகளில் ஏற்பட்ட மாற்றம் இவரது உயரதிகாரிகளின் கண்களில் படவே இவரை தீவிரமாக கண்காணிக்க துவங்கியிருக்கின்றனர். அப்போதுதான் மேன்னிங் இவ்வளவு காலமாக உயரதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, அமெரிக்க ராணுவ ரகசிங்களை விக்கிலீக்ஸுக்கு விற்றுக்கொண்டிருக்கும் விஷயமே தெரிய வந்துள்ளது.
குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட 2013-ஆம் ஆண்டில் இவர்மீது மேலும் ஏகப்பட்ட வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு 35 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு அனுப்பப்பட்டார்.
கான்சாசில் இருக்கும் ஃபோர்ட் லிவன்வொர்த் சிறையில் தற்போது இருக்கும் மேன்னிங் சிறை நிர்வாகத்துக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியிருக்கிறார் என்பதுதான் தற்போதைய செய்தி. சிறையில் இவர் மிகவும் துன்புறுத்தப்படுவதே இதற்குக் காரணமாம்.
இவர் கடந்த ஜூலை மாதம் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.