டில்லி,
ழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள், கமிஷனுக்காகவும், தமக்கு வேண்டிய பண முதலைகளுக்காகவும் மாற்றி தரும் ஊழியர்கள், மேலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கடந்த 8ந்தேதி நள்ளிரவு முதல் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் பழைய நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால், பொதுமக்கள் தாங்கள் கையில் இருப்பு வைத்திருக்கும் பணத்தை வங்கிகளில் வரிசையில் வெயில் நிழல் பார்க்காது  நின்று மாற்றி வருகின்றனர்.

கடந்த 6 நாட்களாக பொதுமக்கள் சரியாக சில்லைரை கிடைக்காமலும், பணம் மாற்ற முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசு ஒவ்வொரு வங்கிக்கும் போதுமான அளவு பணம் அனுப்பியும், பொதுமக்களுக்கு பணம் கிடைக்காமல் சங்கடப்பட்டு வருகின்றனர். பணம் இல்லை என்று கூறி வங்கியை மூடி விடுகிறார்கள்.
இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தனியார் வங்கிகள், தங்களிம் நடப்பு கணக்கு வைத்திருக்கும் பண முதலைகளுக்கே முன்னுரிமை காட்டு கின்றனர். சாதாரண, எளிய மக்களை பற்றி சிந்திப்பதுகூட கிடையாது.
பெரும்பாலான தனியார் வங்கி மேலாளர்கள், ஊழியர்கள்  தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் பண முதலை களிடம் இருந்து கருப்பு பணத்தை மொத்தமாக லட்சக்கணக்கில் வாங்கிக்கொண்டு புதிய நோட்டுகளை மாற்றி கொடுப்பதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன.
இதற்காக வங்கி ஊழியர்களுக்கு 30 சதவிகிதம் வரை கமிஷன் கொடுக்கப்படுவதாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக பொதுமக்களுக்கு சரியான முறையில் பணம் மாற்றிக்கொடுக்கப்பட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
மொத்தமாக ஒருவருக்கே பெரும்பாலான பணம் சென்றுவிடுகிறபடியால் வரிசையில் நிற்கும் அப்பாவி மக்களின் கதி அதோ கதியாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே 5 நாட்களை கடந்தும் இன்றுவரை வங்கி வாயில்களில் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
arrest
இதற்கு எடுத்துக்காட்டாக, ஆந்திரா மாநிலம் ஐதராபாத் அரசு வங்கியில்  வேலை பார்க்கும் 2 அதிகாரிகள், தனக்கு வேண்டியவர்களுக்காக எவ்வித ஆவணமும் இல்லாமல், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் போட்டு ரூ.6 லட்சம் ரூபாயை மாற்றியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரும்  கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இன்று முதல் கமிஷனுக்கு பணம் மாற்றி தரும் வங்கி மேலாளர்கள் , ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் யாராக இருந்தாலும், பணம் மொத்தமாக மாற்றி தருவது தெரிய வந்தால் உடடினயாக  கைது செய்யப்படுவார்கள் என மத்திய அரசு எச்சரித்து உள்ளது.