நாளை மகா தீபம்: வீடுகளில் தீபம் ஏற்றுவோம்… வாழ்வில் வெளிச்சம் பெறுவோம்

சுபமங்களகரமான கார்த்திகை மாதத்தில், பிரகாசமான பவுர்ணமி திதியில் கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்து வரும் அன்று மகாதீபம் கொண்டாடப்படுகிறது.

அறிவு என்ற ஞானம் வரும்போது அறியாமை என்ற இருள் அகல்கிறது என்பதே தீப தரிசனத்தின் தத்துவமாகும்.

இன்றைய தினம் ஒவ்வொருவரும் வீடுகளில் தவறாமல் விளக்கேற்றி… வாழ்வில் வெளிச்சத்தை யும், உயர்வையும் பெற வேண்டியது அவசியம்.

இன்றைய தினம், அகல், எண்ணெய், திரி, சுடர் என்ற நான்கும்  ஒன்று சேர்ந்து விளக்காக மாற்றப்பட்டு ஏற்றப்படு றது. இதைத்தான் ஆன்மிகவாதிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என கூறுகினற்னர். இந்த அறிவொளியையே நாம்  தீப சக்தியாக காலங்காலமாக கொண்டாடி வருகிறோம்.

அருட்பிரகாச வள்ளலார் தீப ஜோதி தரிசனத்தின் மகிமையை உலகுக்கு விளக்கி உள்ளார். அதன் காரணமாகவே  அவரது கோவில்களில் ஜோதி தரிசனம் மற்றுமே காணப்படுகிறது. வட மாநிலங் களில் தீபாவளி பண்டிகையின்போது வீடுகளில் வரிசையாக விளக்கு ஏற்றி சிறப்பித்து வருகிறார்கள்.

சிவன், முருகனுக்கு பிடித்த மாதமான கார்த்திகை மாதத்தின் முதல் நாள் முதல் மாதம் முழு வதும் மாலை  நேரத்தில்  வீட்டின் வாசலில் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு. விளக்கு ஏற்றும்போது சிவ நாமம் ஜபிப்பது நலம். தினை மாவில் விளக்கு ஏற்றி வழிபடுவதும் மிகவும் விசேஷம்.

குறிப்பாக  கார்த்தி  தீபத் திருநாளில் சிவனையும், முருகனையும் நினைத்து விரதம் இருந்து மாலையில் சந்திர தரிசனம் செய்து  வீட்டின் நடுவாசல், வராண்டா, சுவர்கள் கைப்பிடி சுவர்கள்,  வாசற்படி, துளசி மாடம், மதில் சுவர் என எல்லா இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வீட்டை பிரகாசமாக வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

வீடுகள், தெருக்கள் தோறும் விளக்குகள் பிரகாசிப்பதால்  அனைத்து இடங்களும் ஜோதிமயமாக, மங்களகரமாக காணப்படும். அதுபோல வீட்டின் பூஜையறையில் 5 முகங்கள் உள்ள குத்துவிளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு.  குத்து விளக்கின் 5 முகங்களும் பெண்களின் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசித புத்தி,  சகிப்புத்தன்மை ஆகியவற்றை குறிப்பதாக ஆன்றோர்கள் கூறி உள்ளனர்.

குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றி வழிபடுவது  லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். நம் மனத்தில் அஞ்ஞானம் அகன்று,  மெய்ஞானம் தோன்றும். ஜாதகத்தில் உள்ள கிரக தோஷ பீடைகள் அகலும். குழந்தை  பாக்யம் கிடைக்கும். வீட்டில் தீய சக்திகள் மற்றும் ஏவல், பில்லி, சூனியம் போன்றவை விலகி ஓடும். மனம் ஆன்மிக பரவசத்தில் திளைக்கும்.

இந்த  திருக்கார்த்திகை நம் வாழ்வில் மகிழ்ச்சியான மாற்றங்களை தரவேண்டும் என ஜோதி சொரூபனான சிவபெருமானை ‘ வணங்கி அருள் பெறுவோம்…

மகா தீபத்துக்கு திருவண்ணாமலை பெயர் பெற காரணம் என்ன?

அடி, முடி காண முடியாதவன் சிவபெருமான் என்பதை விஷ்ணுவும் பிரம்மாவும் உணர்கிறார்கள். அடிமுடியற்ற ஜோதி  சொரூபனாக அவர்களுக்கு சிவபெருமான் காட்சி தந்த திருத்தலம் திருவண்ணாமலை. அதை கொண்டாடும் வகையிலேயே மகா கார்த்திகை தீப திருநாளன்று  திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மற்ற சிவாலயங்களிலும் தீபஜோதி பூஜைகள் விமர்சையாக நடக்கின்றன.

இதையடுத்து சொக்கப்பனையும் கொளுத்தப்படும். கம்புகளையும் பனை ஓலைகளையும் கொண்டு கோபுரம்போல அமைத்து அதில் பட்டாசு, வெடிகள் கட்டி  கொளுத்தி விடுவார்கள். கொழுந்துவிட்டு எரியும் ஜோதி வடிவில் சிவபெருமானை தரிசிப்பதே இதன் தாத்பர்யம்.

திருவண்ணாமலையில் தீப திருவிழா பெரும்  விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் முதலில் கோயிலில் பரணி தீபம் ஏற்றிவிட்டு, பின்னர் மலையில் மகாதீபம் ஏற்றுவார்கள். அதேநேரத்திலும் பொதுமக்கள் தங்கள்து வீடுகளில்  விளக்கேற்றி வழிபடுவார்கள்..

Tags: Tomorrow's Maha Deepam at Thiruvannamalai: Let's Light In The House ... Let Life Be Light, நாளை மகா தீபம்: வீடுகளில் தீபம் ஏற்றுவோம்... வாழ்வில் வெளிச்சம் பெறுவோம்