ஜப்பான் தலைநகர் டோக்கியோ 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடும் பனிப்பொழிவை சந்தித்துள்ளது. நவம்பர் மாதத்திலேயே இந்த பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் இதற்கு நவம்பர் பனி என்று பெயர்.

japan_snow3

நவம்பர் பனிப்பொழிவுகள் கடந்த 1875 முதல் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. வழக்கத்துக்கு மாறாக நவம்பர் மாதத்தில் பனிப்பொழிவும் அதோடு சேர்ந்து வீசிய பனிக்காற்றும் டோக்கியோவாசிகளுக்கு புதிய அனுபவமாக இருந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் மேற்புறங்கள் மற்றும் பதைகளின் ஓரங்களும் பனியினால் வெண்ணிறமான மின்னின. பனிப்பொழிவின் விளைவாக ரயில்கள் சற்று தாமதமாக இயங்கின.

japan_snow2

இந்த ஆண்டு 2 செ.மீ வரை பனிப்பொழிவு இருக்கக்கூடும் என்று வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மத்திய டோக்கியோ கடைசியாக நவம்பர் பனிப்பொழிவை சந்தித்தது கடந்த 1962-ஆம் ஆண்டு ஆகும்.

japan_snow1

இந்த ஆண்டு வரப்போகும் கடும் பனிப்பொழிவுவை சமாளிக்க டோக்கியோவாசிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
Photo Credit: The Gaurdian