வரலாற்றில் இன்று 24.11.2016
நவம்பர் 24  கிரிகோரியன் ஆண்டின் 328 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 329 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 37 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை கண்டுபிடித்தார்.
1642 – ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.
1859 – சார்ல்ஸ் டார்வின் உயிரங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார்.
1914 – முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
1926 – பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு அரவிந்தர் இளைப்பாறினார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது அமெரிக்க குண்டுவீச்சு
1969 – சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1992 – யாழ்ப்பாணம், பலாலி வான்படை தளம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
2002 – ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
பிறப்புக்கள்
1938 – ஆஸ்கர் ராபர்ட்சன், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
1961 – அருந்ததி ராய், இந்தியப் பெண் எழுத்தாளர்
arunthathirai
இறப்புகள்
2012 – வி. என். சிதம்பரம் திரைப்பட தயாரிப்பாளர்
2014 – முரளி தியோரா, இந்திய அரசியல்வாதி (பி. 1937)
சிறப்பு நாள்
கொங்கோ மக்களாட்சிக் குடியரசு – தேசிய நாள்
படிவளர்ச்சி நாள்